ஸ்ரீசைலம் அணையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு: தமிழக அமைச்சர்களின் ஆந்திர பயணம் வெற்றி !!
ஸ்ரீசைலம் அணையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு: தமிழக அமைச்சர்களின் ஆந்திர பயணம் வெற்றி !!
ஆந்திர முதலமைச்சரை சந்தித்த தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினர் .இதையடுத்து, தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீரை திறந்து விட ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு இட்டார். இந்த நிலையில், ஸ்ரீசைலம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 12 மதகுகளில் 10 மதகுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு இரண்டரை லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.