ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!!

ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!!

Update: 2019-09-04 05:42 GMT


ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் நடக்கிறது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின்பேரில், அக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு விளாடிவோஸ்டோக் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


ரஷ்ய ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் மோடியை வரவேற்றனர். இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மோடி, அங்கிருந்து கிழக்கு மத்திய பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் மோடியை வரவேற்றனர்.  


இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக இன்று அதிகாலை 5.09 மணிக்கு டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “விளாடிவோஸ்டோக் வந்தடைந்தேன். இந்த குறுகிய கால மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1169032297779224578


ரஷிய பயணத்தையொட்டி, பிரதமர் மோடி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-


என் நண்பர் புதினுடன் இருதரப்பு உறவின் அனைத்து அம்சங்கள் மற்றும் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருக்கிறேன். எனது பயணம், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் கொண்டுள்ள ஆர்வத்தை கோடிட்டுக் காட்டுகிறது.


அதுபோல், கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க வரும் உலக தலைவர்களை சந்திப்பதற்கும் ஆவலாக இருக்கிறேன். இந்திய தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளேன்.


இந்தியாவும், ரஷியாவும் சிறப்பான நல்லுறவை பராமரித்து வருகின்றன. பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, விண்வெளி பயன்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம். வர்த்தக, முதலீட்டு உறவும் வளர்ந்து வருகிறது. 
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


இன்று விளாடிவாஸ்டாக் நகரில் நடக்க உள்ள ரஷ்யா, இந்திய இரு தரப்பு 20-ஆம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கிறார்.


அப்போது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குதி செய்வது, குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் ரஷ்யாவுடன் 25 ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தொடர்ந்து கிழக்கிந்திய பொருளாதார பேரவை மநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பின்னர் மோடியும், புடினும் அங்குள்ள முக்கியமான கப்பல்கட்டும் தளம் ஒன்றிற்கு சென்று பார்வையிடுகின்றனர்.


Similar News