அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கமலுக்கு உண்மையில் என்னதான் ஆச்சு ?? கட்சி துணை தலைவர் விளக்கம்!
அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கமலுக்கு உண்மையில் என்னதான் ஆச்சு ?? கட்சி துணை தலைவர் விளக்கம்!
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
"கடந்த 2016 ஆம் ஆண்டு கமலுக்கு ஏற்பட்ட விபத்தில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சையின் மூலம் அவரது காலில் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டது. சினிமா, அரசியல் என பல வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் அந்தக் கம்பியை அகற்றும் சிகிச்சை தள்ளிப்போனது. அதற்கான நேரம் கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் தற்போது கம்பியை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது," என்று இது தொடர்பாக வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை (நவம்பர் 22) நடக்கவுள்ள அறுவை சிகிச்சையை அடுத்து அவர் சிறிது காலம் ஓய்வில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானதும் அவரது தொண்டர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியுற்றாலும் அறிக்கையில் இருக்கும் தகவல் அவர்களை ஓரளவு சமாதானப்படுத்தியுள்ளது.