TTV.தினகரன் வீழ்ச்சியை நோக்கி செல்வதன் காரணம் என்ன?

TTV.தினகரன் வீழ்ச்சியை நோக்கி செல்வதன் காரணம் என்ன?

Update: 2019-09-11 09:26 GMT

நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டதுபோல், அமமுகவிலிருந்து நிர்வாகிகள் பின்னங்கால் பிடரிபட ஓடுகிறார்களே, ஏன்? பேரார்வம், ஆரவாரம், கொஞ்சம் மமதை மற்றும் பெரும் நம்பிக்கையுடன் கைக்காசைச் செலவுசெய்து கற்பகம் கார்டன் வாசலில் கிடையாய் கிடந்தவர்கள் தானே, இவர்கள்? கடந்த இரு ஆண்டுகளாக தினகரனால் பதவி, பணம் எதுவும் அனுபவித்தாக தெரியவில்லையே ?. தினகரனின் போலிச்சிரிப்பு தான் இவர்களை கட்டிப் போட்டதா? அப்படியெனில் இன்னும் அவர்கள் அங்குதானே இருக்க வேண்டும்? ஒற்றை ஆர்.கே.நகர் வெற்றியால் இணைந்தது போல, ஒற்றைத் தோல்வியால், இனி அமமுகவுக்கு எதிர்காலம் இல்லை முடிவு செய்தார்களா? இருக்கலாம்!


மேம்போக்காகப் பார்த்தால். ஆனால் தோல்வியடைந்த அனைத்து இயக்கங்களும் இப்படியா சரிகின்றன? . வெவ்வேறு அமமுக தலைவர்கள் பலவேறு தருணங்களில் நொந்து நூலாகி, செய்வதறியாது திகைத்துப் போய் மவுனமாகி, பொறுமையுடன் நாட்களை நகர்த்தி வந்தது புரிகிறது. காலம் கனிந்ததால், இப்போது கட்சி கரைகிறது. . இது கருவின் குற்றமேயன்றி, காலத்தின் பிழையல்ல. #கரு வேறு யார்? திருவாளர் தினகரன் தான். அந்த கருவின் உரு மன்னார்குடி பிம்பம். . தினகரனின் குணம் அறிந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள், அவரை அதிமுகவை அண்டவிடாமல் விலக்கியே வைத்திருந்தது ஏன் என்று இப்போது தான் இவர்களுக்கு புரிகிறது. இதோ! தினகரனின் குன்றிய குணநலனை விளக்கும பின்வரும் காரணிகள்; .


"#தான்தோன்றி #மனோபாவம்". யாரையும் மதித்து கலந்து முடிவுகள் மேற்கொள்ளும் பண்பு அறவே இல்லாதவர். தன்னை புரட்சித்தலைவரை விட, புரட்சித்தலைவி அம்மாவை விட பெரிய சக்தியென உருவகித்துக் கொண்டவர் அல்லவா? மிகவும் Tough ஆனவராகத் தோன்றிய புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கூட வெளியே தெரியாமல் தனக்கென ஒரு ஆலோசகர் வட்டத்தை வைத்திருந்தார். கலந்து தான் முடிவெடுத்தார் என்பது உலகமறியும். . தினகரன் கழகத்திற்கு திரும்பிய சில வாரங்களிலேயே, உறுதியும் வெளிப்படைத்தன்மையும் நிறைந்த மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தொடங்கி, அமைச்சர்கள் அனைவரும் தினகரனை விலகிச் சென்றதன் காரணம் அதுவே. சசிகலாவைக்கூட அவ்வளவாக விமர்சிக்காவிட்டாலும், அதிமுக தலைவர்கள், தினகரனை கண்டாலே அலர்ஜியானதற்கு காரணம் அது தான். .


நேர்மையின்மை" (Insincerity). தாம் நம்பும் ஒரு தலைவர், தாய்க்கு சமம். ஆனால் தலைவர் நாடகக்காரராக, நம்பத்தகுந்தவராக இல்லையெனில் தொண்டர்கள் பொடிப்பொடியாக உதிர்ந்து போவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உயர்வதில்லை. .


தெளிசிந்தனையின்மை". தனது செயல்களுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை யூகிக்க / உணர முடியாதவராகவே (Myopic) இருந்து வருகிறார். அவரது முன்னுக்குப்பின் முரணான முடிவுகள், சட்டப்போரில் அமமுக சந்தித்த தொடர் தோல்விகளை கட்சியினர் அழுத்தமாக சுட்டுகிறார்கள். . இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தரமுயன்ற வழக்கில் தினகரனே அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில், சுகேஷ் சந்திரசேகர் என்னும் இடைத்தரகரை, தான் உயர்நீதிமன்ற நீதிபதி என நினைத்து ஏமாந்ததாக தெரிவித்துள்ளார். . முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொதுவெளியில் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. ஒரு பெயர் சொன்னாலே, எட்டாம் வகுப்பு சிறுமி கூட, அந்நபரின் ஜாதகத்தையே சில நிமிடங்களில் இணையத்தில் அலசிவிட முடியும் காலத்தில், ஒரு தலைவர் இவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறாரே? ஆம்! அவ்வளவுதான் அவரது அறிவும் தெளிவும். .


புறம்பேசுதல். தனக்குகீழ் இருக்கும் ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் இளக்காரமாக பேசினால், அந்த இன்னொருவர் தனக்கும் இந்த கதி தானே என்று நினைக்க மாட்டாரா? இது போதாதா அணிமாடம் அழிவதற்கு? .


ஏணிகளை #எட்டிஉதைத்தல். தன்னை உயர்த்திய தளகர்த்தர்கள் தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்டால், அவர்களை தரைமட்டமாக விமர்சித்தல் முகம் சுளிக்க வைக்கும் குணம் அல்லவா? தினகரன் கட்சியில் இருந்து விலகும் ஒவ்வொருவரையும், பொட்டிப்பாம்பு, ஜட்டிப் பாம்பு என்று கேவலப்படுத்துவதால் தானே கட்சி நெல்லிக்காய் மூட்டையாக சிதறுகிறது? .


ஏளனப்பேச்சு. ஏளனங்களை பொதுவாக ரசித்து சிரிக்கும் பண்பு மக்களிடம் உண்டு. கவுண்டமணி, சந்தானம் ஆகியோர் பேச்சை நாம் ரசிப்பது அப்படித்தான். ஆனால் மக்கள் இதயத்தை கவர்வது பரிதாபத்துக்குரிய பணிவு மிகுந்தவர்கள் தான். (செந்தில், வடிவேலு). இப்போது புரிகிறதா ஏளனக்காரர்கள் தானே "காமெடி" ஆவது? . ஏளனம் எப்போதாவது Reactive ஆக இருக்கலாம், அதுவே ஒருவரது Style ஆனால், அவரால் தலைவனாக நீடிக்கமுடியாது. "போயும் போயும் ஒரு பொம்பள…" என்று இளக்காரமாக புரட்சித் தலைவியை பேசியது தான் கருணாநிதிக்கு ஜென்மச் சனியானது. .


எஞ்சி இருக்கும் அமமுக தொண்டர்களே! உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் தான் என்று நம்பினால் நீங்களும் உடனே வெளியேறுங்கள்,சொல்வதற்கு வேறு எதுவுமில்லை. என அமுமுக விலிருந்து விலகும் நிர்வாகிகள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.


Similar News