வாட்ஸ் ஆப் அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள் இதோ புது அப்டேட்.!

வாட்ஸ் ஆப் அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள் இதோ புது அப்டேட்.!

Update: 2019-10-03 05:34 GMT

வாட்ஸ்ஆப்' வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதற்கேற்றார் போல் வாட்ஸ் ஆப் நிறுவனமும் புது புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் புது அறிவிப்பை வெளியிட காத்திருக்கிறது வாட்ஸ் ஆப்.


வாட்ஸ்ஆப்பில் ஒருவர் மற்றொருவருக்கு புகைப்படம் முகவரி வீடியோ கால் என பல வசதிகளை பயன்படுத்தி தொடர்பு கொண்டு வருகின்றனர். சில நேரங்களில் முக்கிய ஆவணங்கள் கூட இதில் பகிரப்படுகிறது. இந்நிலையில் வாட்ஸ் ஆப் சில மாதங்களுக்கு முன் தன் அனுப்பிய செய்தியை அழிக்கும் வசதியை தந்தது ஆனால் அது 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டால் அழிக்க முடியாது.


இதை கருத்தில் கொண்டு தற்போது குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்,செய்தியை, தானாகவே அழியும் புதிய வசதியை அறிமுகம் செய்ய வாட்ஸ்ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


மிகவும் முக்கியமான ஆவணங்கள் செய்திகள் புகைப்படம் ஆகியவற்றை அனுப்பும் போது,செய்தியின் தன்மையை கருதி, அந்த செய்தியோ அல்லது புகைப்படமே மற்றவர்களிடம் இருக்க வேண்டாம் என நினைப்பவர்களுக்கு இந்த வசதி உதவும்.


இந்த புதிய அப்டேட் படி, செய்தியை நாம் அனுப்பும் தருணத்தில் ஐந்து விநாடிகளோ அல்லது ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அந்த செய்தி தானாகவே அழியும் வசதியை தேர்வு செய்ய வேண்டும். இந்த திட்டமானது சோதனையில் வெற்றி அடைந்துள்ளது. ஆனால், இந்த வசதி எப்போது வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Similar News