தூய்மை இந்தியா அல்லது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி நாம் பேசும்போது காங்கிரசுக்கு வயிற்று வலி வரும்- மோடி!!

தூய்மை இந்தியா அல்லது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி நாம் பேசும்போது காங்கிரசுக்கு வயிற்று வலி வரும்- மோடி!!

Update: 2019-10-19 07:21 GMT

அக்டோபர் 21 ம் தேதி மராட்டியம், அரியானா தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 24 ம் தேதி நடைபெறுகிறது.பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானாவின் சோனிபட்டில் நடந்த ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.


 
ஒவ்வொரு துறையிலும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது, அது விளையாட்டு  அல்லது பயங்கரவாதத்திற்கு எதிராக போராடினாலும் சரி. காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களோ விவசாயிகளோ அல்லது எங்கள் விளையாட்டு வீரர்களோ பாதுகாப்பாக இல்லை. காங்கிரஸ் விவசாயத்தில் ஊழலில் ஈடுபட்டது மற்றும் விளையாட்டுகளில் மோசடிகளை செய்தது.



தூய்மை இந்தியா அல்லது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி நாம் பேசும்போது காங்கிரசுக்கு வயிற்று வலி வரும், தற்செயலாக யாராவது பாலகோட் என்று சொன்னால் காங்கிரஸ் வலியால் குதிக்கத் தொடங்குகிறது.


Source :- NEWS 18


Similar News