இஸ்லாத்தில் நீங்க எந்த பிரிவுக்கு மாறினீர்கள்? வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் !
இஸ்லாத்தில் நீங்க எந்த பிரிவுக்கு மாறினீர்கள்? வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் !
காஞ்சிபுரம் திருக்கழுக்குன்றதை சேர்ந்த 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ரில்வான் அவர் ஆதி திராவிட இன பெண்ணான ராம்ஜியாவை திருமணம் செய்து கொண்டார்!இவர்களுக்கு ஹர்ஷத், ஹர்ஷிதா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்!
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதி சான்றிதழ் வேண்டும் என திருக்கழுக்குன்றம் தாசில்தாருக்கு விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பத்தை நிராகரிதார் செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர்.இந்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ரில்வான்.
இந்த மனுவை நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்குவந்தது . அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி இஸ்லாம் மதத்துக்கு மாறிய மனுதாரர் அந்த மதத்தில் எந்த பிரிவில் சேர்ந்து உள்ளார் என்பதை தெரிவிக்க வில்லை. அதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் வழங்க இயலாது என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இஸ்லாம் மதத்தில் எந்த பிரிவுக்கு மாறினார் என்பதை மனுதாரர் தெரிவிக்கவில்லை என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதி சான்றிதழ் பெற அவருக்கு உரிமை இல்லை என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
இந்து மதத்தில் மாட்டும் பிரிவுகள் இருப்பது போல் காட்டி கொள்ளும் த்ரவிட அரசியல் கட்சிகள் கிருத்துவ மதத்திலும், இஸ்லாமிலும் பிரிவுகள்இருக்கிறது எனபதை கூற மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள்