இறைவன் என்பவன் யார் ? எங்கு இருக்கிறான் ? அவன் தன்மை என்ன!
இறைவன் என்பவன் யார் ? எங்கு இருக்கிறான் ? அவன் தன்மை என்ன!
இறைவன் மனித வாழ்வில் இறுதிகாலத்திலாவது தவிர்க்கமுடியாத ஒரு அம்சமாகி விடுகிறான். இந்த இறைவனை பற்றி மணிதன் எல்ல காலங்களிலும் சிந்தித்திருக்கிறான். மனிதன் சிந்திக்க தெரிந்த காலத்தில் இருந்து தர்க்கத்திற்கும் விவாதத்திற்கும் உரியதாக இருக்கும் ஒரு விஷயம் இறைவனை பற்றியது தான். இறைவன் என்பவன் யார் ? எங்கு இருக்கிறான் ? அவன் தன்மை என்ன ? அவனை எப்படி அடைவது என்பது போன்ற நிறைய கேள்விகள் மனிதன் மனதில் காலம் காலமாக எழுந்து கொன்டே இருக்கின்றன அதற்கேற்றவாறு உலகெங்கிலும் இறைவனை பற்றி சொல்லும் நிறைய மார்க்கங்களை இறைவனை
உணர்ந்தவர்கள் ஏற்படுத்தி இருக்கின்றனர். எல்ல மார்கங்களுமே நம்மை ஆளும் ஒரு பேராற்றல் இருப்பதாக ஏற்றுக்கொள்கின்றன அந்த பேராற்றலை வணங்கவும் செய்கின்றன. அனால் பேராற்றலை வணங்கும் விதம் மட்டும்தான் மாறுபடுகிறது.
ஒவொரு மனிதனும் ஒவொரு தன்மையை கொண்டவன். ஒருவருக்கு ஏற்புடைய பாதை மற்றவருக்கு ஏற்புடையதாக இருக்காது. அதனாலேயே நம் முன்னோர்கள் இறைவனை அடைய ஒன்றிற்கும் மேற்பட்ட வழிகளை ஏற்படுத்தி உள்ளனர். கர்மா யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் என்னும்
வழிமுறைகளாகும் இதில் பக்தி யோகம் என்பது இந்த பிறவி சக்கரத்தில் இருந்து விடுபட தான்
விரும்பிய ஒன்றின் பொருட்டு தனையே அர்பணிப்பது. அங்கு மனிதனுடைய தன்முனைப்பிற்கு இடமில்லை. அடையாளங்களுக்கு இடமில்லை. அவை எல்லாம் அவன் அன்பு செலுத்தும் அந்த அந்த நபரின் அல்லது பொருளின் பொருட்டு கரைந்து அழிந்து விடும். ஆஞ்சநேயர் இந்திய புராணங்களில் இதற்கு
மிக சிறந்த உதாரணமாவர். கர்மா யோகம் என்பது தனக்கு விதிக்கப்பட்ட செயல்களில் எதிர்பார்ப்பில்லாமல் முழு மனதுடன் செயல்படுவது. பகவத் கீதையில் கண்ணன் கர்மா யோகத்தை பற்றி விரிவாக பேசியுள்ளார். இதில் பக்தி யோகம் என்பது இந்த பிறவி சக்கரத்தில் இருந்து விடுபட தான்
விரும்பிய ஒன்றின் பொருட்டு தனையே அர்பணிப்பது. அங்கு மனிதனுடைய தன்முனைப்பிற்கு இடமில்லை. அடையாளங்களுக்கு இடமில்லை.
அவை எல்லாம் அவன் அன்பு செலுத்தும் அந்த அந்த நபரின் அல்லது பொருளின் பொருட்டு கரைந்து அழிந்து விடும். ஆஞ்சநேயர் இந்திய புராணங்களில் இதற்கு மிக சிறந்த உதாரணமாவர். கர்மா யோகம் என்பது தனக்கு விதிக்கப்பட்ட செயல்களில் எதிர்பார்ப்பில்லாமல் முழு மனதுடன் செயல்படுவது. பகவத்
கீதையில் கண்ணன் கர்மா யோகத்தை பற்றி விரிவாக பேசியுள்ளார். ஞான யோகம் என்பது ஞானத்தின் உயரத்தில் நின்று உலகை பார்க்கும் தன்மையை பெறுவது. ஞான யோகத்திற்கு உதாரணமாக ஆதி சங்கரரை சொல்லலாம். ராஜ யோகம் என்பது நம் மனதை முழுமையாக நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து
அதன் மூலமாக இறைவனை உணர்ந்து கொள்ள முயற்சி செய்யவது. மனதின் தன்மையைகளையும் அதை கட்டுப்படுத்தும் விதத்தையும் பதஞ்சலி முனிவர் தனது அஸ்தங்க யோகத்தில் விவரித்துள்ளார்.