தீபாவளியில் புலியுடன் மோதும் சிறுத்தை ஜெயிக்கப்போவது யார்?

தீபாவளியில் புலியுடன் மோதும் சிறுத்தை ஜெயிக்கப்போவது யார்?

Update: 2019-08-24 10:22 GMT

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் தீபாவளி தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த ஒருசில திரைப்படங்கள் பின்வாங்கிவிட்டதால் தீபாவளி அன்று 'பிகில் சோலோவாக ரிலீஸ் ஆகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது


இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கைதி' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.


விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் நாயகி, டூயட் இல்லாத விறுவிறுப்பான படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Similar News