ப.சிதம்பரத்தை தொடர்ந்து ஜெயிலுக்கு போவது யார்? கனிமொழியா? கார்த்தி சிதம்பரமா? மெகா லிஸ்ட் ரெடி!!
ப.சிதம்பரத்தை தொடர்ந்து ஜெயிலுக்கு போவது யார்? கனிமொழியா? கார்த்தி சிதம்பரமா? மெகா லிஸ்ட் ரெடி!!
ஐ.என்.எக்ஸ் மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து 5 நாள் காவலில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.ஐ அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் மற்றவர்கள் மீது உள்ள வழக்குகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஊழல், மோசடி தலைகள் பல அடுத்தடுத்து உருளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி சிதம்பரம்:
ஐ.என்.எக்ஸ் மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே கைதானார். ஐ.என்.எக்ஸ் மோசடி வழக்கு தவிர மேலும் பல வழக்குகளிலும் கார்த்தி சிதம்பரத்திற்கும், ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு உள்ளதால், அந்த வழக்குகளிலும் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியா தவிர வெளிநாடுகளிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கார்த்தி சிதம்பரத்திற்கு உள்ளதால் அவை தொடர்பான வழக்குகளிலும் ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் சிக்கி உள்ளனர்.
ராபர்ட் வதேரா:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துகள் வாங்கியது தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் :
இதேபோல 2ஜி வழக்கு மெல் முறையீட்டில் அதிகமான ஆவணங்களை சி.பி.ஐ சேகரித்து உள்ளது. இதனால் 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் இனி தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க கோர்ட்டில் சி.பி.ஐ முறையிட்டு உள்ளது. இதனால் கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டி.கே.சிவக்குமார்:
கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹவாலா பணப்பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக காங்கிரஸ் முக்கிய தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்கள் மீது பண மோசடிதடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர், சிவக்குமாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் சிவக்குமார் வருமான வரித்துறையினரின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த வாரமும், டில்லி மற்றும் கர்நாடகாவிலும் சோதனை நடந்தது. இதில் 10 கோடி பணம் சிக்கியது.