சிறைக்கு செல்ல போகிறாரா ராகுல்காந்தி? தீர்ப்பு இந்த வாரம் வெளியாகிறது?

சிறைக்கு செல்ல போகிறாரா ராகுல்காந்தி? தீர்ப்பு இந்த வாரம் வெளியாகிறது?

Update: 2019-11-12 06:37 GMT

கடந்த லோக்சபா தேர்தலை ஒட்டி நாட்டின் பாதுகாவலர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி பிரச்சாரம் செய்தார். ஆனால், அப்போது ரபேல் போர் விமானங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார், எனவே பிரதமர் இந்த நாட்டின் பாதுகாவலர் கிடையாது. காவலரே திருடர் என்று தெரிவித்தார் ராகுல் காந்தி. பல்வேறு தேர்தல் பிரச்சாரங்களில் இவ்வாறு ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த எம்பி மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.


இந்த வழக்கு விசாரணையின் போது தனது தவறை ஒப்புக் கொண்ட ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்திய மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இந்த வாரம் வழங்குகிறது.


Similar News