தாய்க்கு நிகரான பசுக்கள் - இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது : பனி காலத்திலிருந்து பாதுகாக்க உத்தரபிரதேச அரசு மேற்கொள்ளும் அசத்தல் நடவடிக்கை!

தாய்க்கு நிகரான பசுக்கள் - இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது : பனி காலத்திலிருந்து பாதுகாக்க உத்தரபிரதேச அரசு மேற்கொள்ளும் அசத்தல் நடவடிக்கை!

Update: 2019-11-26 12:33 GMT

உத்திரபிரதேசத்தில் அயோத்தி மாநகராட்சி பனிக்காலம் நெருங்குவதால் அங்குள்ள கால்நடைகளுக்கு "சணல் ஆடைகளில்" தயாரிக்கும் பணிக்காக நிதி ஒதுக்கி உள்ளது.
அயோத்தி மாநகராட்சி ஆணையர் நீரஜ் ஷுக்லா கூறுகையில் இந்த திட்டம் நான்கு பகுதிகளாக செயல்பட உள்ளது. முதல் பகுதியாக 1200 பசுக்கள் உள்ள பஷின்பூர் பசு சாலைக்கு இந்த பாதுகாப்பு உடைகள் வழங்கப்படும். தொடக்க கட்டமாக 100 பசுக்களுக்கான தயாரிக்கும் பனி நடந்து வருகிறது. இந்த ஆடைகளின் மதிப்பு ரூபாய் 250 முதல் 300 வரை உள்ளது.


இந்த ஆடை மூன்று பகுதிகளை கொண்டதாக இருக்கும், இதன் உட்புறம் மிருதுவானதாகவும் உடலிற்கு வெப்பத்தை அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். பசுக்களுக்கு மட்டுமல்லாது எருமைகளுக்கும் இது போன்ற ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. அனால் பசுக்களுக்கு வழங்கும் ஆடையை போல் அல்லாமல் எருமைகளுக்கு வெறும் சணல் ஆள் ஆனா ஆடை மட்டுமே வழங்கப்படும். மேலும் கால்நடைகளின் தொழுவங்களில் நெருப்பு கொட்டகை அமைக்கப்பட்டு வைக்கோல் அதிகமாக போடப்பட்டு தரையின் குளிரிலிருந்து கால்நடைகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்.


மாநகர மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா அவர்கள் கூறும்போது “எல்லாவகையிலும் பசு பாதுகாப்பு என்பதே எங்கள் குறிக்கோளாக இருக்கிறது. இனி வரும் நாட்களில் எல்ல பசு சாலைகளிலும் இது போன்ற ஏற்பாடு செய்யப்படும் என்றார் “


Similar News