தமிழகத்தில் முதன் முதலாக பேனர்கள், சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்!! இடைத்தேர்தலில் செயல்படுத்த தேர்தல் ஆணையம்முடிவு!!

தமிழகத்தில் முதன் முதலாக பேனர்கள், சுவரொட்டிகள் இல்லாத தேர்தல்!! இடைத்தேர்தலில் செயல்படுத்த தேர்தல் ஆணையம்முடிவு!!

Update: 2019-09-25 12:58 GMT


நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பேனர்கள் வைப்பதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் மற்றும் நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவுகளை மாவட்ட ஆட்சியாளர்கள் பின்பற்றுவர்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்: இடைத்தேர்தலுக்காக சமீபத்தில் ஒட்டப்பட்ட 215 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் பார்வையாளர்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் 18 பறக்கும் படைகளும், கண்காணிப்புக் குழுக்கள் 18ம், இந்த குழுக்களுடன் வீடியோ குழுக்களும் செயல்படும் என்றும் அவர் கூறினார்.


Similar News