ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பிரசவ வலி ! சுகப்பிரசவம் பார்த்த ‘ஒரு ரூபாய் மருத்துவக் குழு’வுக்கு மக்கள் பாராட்டு!

ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பிரசவ வலி ! சுகப்பிரசவம் பார்த்த ‘ஒரு ரூபாய் மருத்துவக் குழு’வுக்கு மக்கள் பாராட்டு!

Update: 2019-11-21 12:52 GMT

மும்பை மற்றும் புறநகர் பகுதி இரயில் நிலையங்களில் பயணிகளுக்கு ஏற்படும் திடீர் உடல் சுகவீனங்களை சரி செய்யும் வகையில், அங்கு ‘ ஒரு ரூபாய் மருத்துவக் குழு’ வினர் இரவும் பகலுமாக தொண்டு உள்ளத்துடன் பணியாற்றி வருகின்றனர். வயிற்று வலி முதல் பிரசவம் வரை அவர்கள் கவனித்து வருகிறார்கள்.


இந்த நிலையில், கர்ப்பிணி ஒருவர் இன்று அதிகாலை வேளை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அந்தப் பெண்ணை கவனித்த உடனிருந்த சக பயணிகள் 'ஒரு ரூபாய் மருத்துவக் குழு'வுக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.


இதையடுத்து, பன்வேல் ரயில் நிலையத்தில் உரிய உபகரணங்களுடன் காத்திருந்த மருத்துவக் குழுவினர் அங்கிருந்த மருத்துவ அறைக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர். பிரசவம் நல்ல முறையில் நடைபெற்றது. பின்னர்,  தாயும், சேயும் பன்வேல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு துரிதமாக செயல்பட்டு சிகிச்சை பார்த்த மருத்துவ குழுவினரை மகாராஷ்டிர அரசு மற்றும் பொது மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.


இதே போல கடந்த மாதமும் 29 வயதான பெண்ணுக்கு இந்த ஒரு ரூபாய் மருத்துவக் குழு மூலம் ஓடும் ரயிலிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News