பூரிக்க செய்யும் ஆச்சர்யங்கள் நம் புராணங்களில்! - #KathirIndic

பூரிக்க செய்யும் ஆச்சர்யங்கள் நம் புராணங்களில்! - #KathirIndic

Update: 2019-10-15 04:01 GMT

நமது இந்திய புராணங்களில் பல இன்றியமைய ஆச்சர்ய தகவல்களை தன்னகத்தே கொண்ட அட்சயபாத்திரம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளுக்கெல்லாம் இன்று வரை அறிவியல்பூர்வமான ஆதாரங்களோ விளக்கங்களோ இல்லை. ஆனால் அதே நேரத்தில் விஞ்ஞான பார்வை கொண்டு அணுகுகிற போது இதிகாசங்களில், புராணங்களில் உள்ள தகவல்களை வெறும் à®ªà¯à®©à¯ˆà®µà¯à®•à®³à¯ என்ற அடிப்படையில் கடந்து போவது சாத்தியமில்லை.  


உதாரணமாக, வட இந்திய நகரங்களிலும் சமவெளிப்பகுதிகளிலும் நடந்த அகழ்வாராய்ச்சியில் அணுக்கதிர்களை வெளியிடும் பொருட்கள் நிரம்ப கிடைத்துள்ளன. இதோடு சேர்த்து பச்சை நிற கண்ணாடித்துகள்கள் போன்றவையும் கிடைத்துள்ளன. இவை என்னவெனில்? இவை எதனால் உண்டாவதெனில்? à®…ணுகுண்டுகள் வெடிக்கிற போது அதில் எழும் அதீத வெப்பத்தால் மணல் துகள் இப்படி கூழாக மாறிவிடும். à®‡à®¤à¯ அணுகுண்டு வெடிப்பினால் மட்டுமே ஏற்படக்கூடியது!


மஹாபாரதக்கதையின் படி வெறும் 18 நாட்களில் கோடிக்கணக்கான போர் வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். ஒரு அணு ஆயுத போர் நடந்தாலன்றி வேறு எவ்வாறு இத்தனை பேர் மடிந்திருக்க முடியும்? மேலும், மொஹன்ஞ்தாரோவில் கிடைக்கும் மண்மேடு மற்றும் குவியல்கள் அணுவெடிப்பிற்கு பிறகான நாகசாகியையே ஒத்திருக்கிறது. எனவே பாரத போரில் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்க கூடும் என்றே கணிக்க முடிகிறது.


மஹாபாரதத்தில் சொல்லப்படும் ஒரு கதை வெறும் கற்பனையாகவே பலராலும் பார்க்கபட்ட நேரத்தில் மருத்துவ உலகில் மேற்கொண்ட à®†à®°à®¾à®¯à¯à®šà¯à®šà®¿ அதை உறுதி செய்துள்ளது. மருத்துவர் மச்கோடோ விசிடா மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கற்பகாலத்தில் ஒரு குழந்தையின் வலது மூளை உயிர்ப்புடன் இருக்கும் என்று அறியப்படுகிறது. 


அர்ஜூனனின் மனைவி சுபத்ரா கர்பமாக இருந்தபோது, அர்ஜூனன் பிறக்கவிருக்கும் தன் குழந்தைக்கு கர்பிக்கும் பொருட்டு, ஒரு குறிப்பிட்ட போர் முறையை அதாவது, சக்ர வியூகத்தை உடைத்து ஊடுருவுவது எப்படி என்று விளக்கினான், பிறகு அதை உடைத்து வெளியேறுவது எப்படி என்று விளக்கும் போது சுபத்திரை தூங்கி போனாள். அதனாலேயே, அபிமன்யூ பின்னாளில் சக்ர வியூகத்தை உடைத்து ஊடுறுவி பின்பு அதிலிருந்து வெளியேற தெரியாமல் மடிந்தான். இந்த கதையின் உண்மைத்தன்மை அறிவியல் வளர்ச்சியால் இன்று விளங்குகிறது.


மேலும் இந்திய புராணங்களில் பரத்வாஜ மஹரிஷி வைமானி சாஸ்திரம் எனும் நூலை இயற்றியிருக்கிறார். இது பெரும்பாலானோருக்கு தெரியாது. இந்த சாஸ்திரம் விமானங்களை பற்றிய தகவல்களை தருகிறது. அதில் இருக்கும் தகவல்களை பார்க்கும்போது தற்போதைய விமானங்களை காட்டிலும் மேம்பட்ட ஒன்றாக இருந்திருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது. 


துரோணபர்வத்தில் விமானங்கள் உருளை போன்ற வடிவில் இருக்கும் என்றும் அது புதன் கிரஹத்தால் ஏற்படுத்தப்படும் காந்த அலைகள் மூலம் அதிலோகத்தில் செல்லும் என்ற தகவலும் புராணத்தில் உண்டு. à®…ர்ஜூன்ன் ஆகாய விமானத்தில் இமயமலைச்சாரலில் பறந்து சென்றான் என்றும், நிவாத கவசங்கள் அதாவது இன்றை விண்வெளி உடை போன்ற ஒன்றை அணிந்திருந்தவர்களிடம் யுத்தம் செய்தான் என்றும் ஏராளமான சுவரஸ்ய தகவல்கள் நம் இதிகாசன்ங்களில் அடங்கியுள்ளன. மலைக்க செய்யும் ஆச்சர்யமூம் வியப்பும் நிறைந்து நமது புராணங்கள் நம் சமகால வளர்ச்சிக்கும் சிந்தனைக்கும் புத்தெழுச்சியும், புத்துணர்வும் ஊட்டுகிறது.


Similar News