நம்மூருக்கும் வந்துருச்சுங்கோ!! பிரம்மாண்ட மாற்றம் காணப்போகும் கோவை - 136 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ வழித்தடம் குறித்த அறிவிப்பு வெளியானது!

நம்மூருக்கும் வந்துருச்சுங்கோ!! பிரம்மாண்ட மாற்றம் காணப்போகும் கோவை - 136 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ வழித்தடம் குறித்த அறிவிப்பு வெளியானது!

Update: 2019-11-16 11:43 GMT

கடந்த 2017-ம் வருடம் நடந்த சட்டசபை கூட்டத்தில் கோவையில் மெட்ரோ ரயில்
திட்டம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் அறிவித்தார், அதன்படி கோவையில்
மெட்ரோ ரயில் அமையும் பற்றிய சாத்திய கூறுகள் பற்றிய ஆய்வுகள் நடந்து
வந்தது. இதன் விளைவாக தற்போது உத்தேசமாக மெட்ரோ ரயில் செல்லவேண்டிய
வழித்தடங்கள் ஆராயப்பட்டு, இதன் அறிக்கை தற்போது அரசுக்கு
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


கோவை மாநகரின் பிரதான இடத்தில், மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க, உத்தேசிக்கப்பட்டுள்ளது. உத்தேச வழித்தடங்களை பரிசீலித்து கருத்துக்களை தெரிவிக்கும்படி, அரசின் வெவ்வேறு துறையினரும், கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை, நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, மாநகராட்சி உள்ளிட்ட அரசு துறையினர், திட்ட வழித்தடங்களில் எதிர்காலத்தில், ஏதேனும் வளர்ச்சிப்பணி மேற்கொள்ள வாய்ப்புள்ளதா என்று கருத்து கோரப்பட்டுள்ளது.ஆய்வறிக்கை தாக்கல்இந்த கருத்துக்களை பெற்று, பரிசீலித்த பின், தேவையான மாற்றங்கள் செய்து, திட்ட வழித்தடம் இறுதி செய்யப்படும். சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுவனம் தான் கோவையிலும், மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மேற்கொள்ள உள்ளது.


தற்போது 136 கி.மீ., நீளத்திற்கு உத்தேச வழித்தடம் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது:



  1. உக்கடத்தில் இருந்து கணியூர் வரை 26 கி.மீ.,
  2. உக்கடத்தில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளீச்சி வரை 24 கி.மீ.,
  3. தடாகம் சாலை, தண்ணீர் பந்தல் முதல் கருமத்தம்பட்டி வரை 42 கி.மீ.,
  4. காருண்யா நகர் முதல் அன்னுார் கணேசபுரம் வரை 44 கி.மீ.,


மேற்கண்ட 4 உத்தேச வழித்தடங்களில், திட்டத்தை செயல்படுத்தலாம் என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Similar News