அமெரிக்காவையே பின்னுக்கு தள்ளிய இந்தியா - வல்லரசு நாடுகளை மிரள வைக்கும் ஆய்வறிக்கை!
அமெரிக்காவையே பின்னுக்கு தள்ளிய இந்தியா - வல்லரசு நாடுகளை மிரள வைக்கும் ஆய்வறிக்கை!
2050 ஆம் ஆண்டு உலக அளவில் இந்திய பொருளாதாரம் இரண்டாம் இடம் பெறும் என்று The Spectator Index நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியா மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார நாடுகளின் எதிர்காலம் பற்றிய இந்த The Spectator Index அறிக்கையில், வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பியநாடுகளின் பொருளாதார நிலையானது 2050-ல் கடும் சரிவை சந்திக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் தற்போது முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை 2020-ம் ஆண்டு சீனா முந்திவிடும். 2050-ல் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனானது 85 டிரில்லியன் டாலராக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கணிப்புகளானது எதிர்காலத்தில் சர்வதேச அளவில் ஆசிய நாடுகளின் முக்கியத்துவத்தையே வெளிப்படுத்துகின்றன என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.