"வந்துட்டார் ராகுல் காந்தி, பா.ஜ.க வெற்றி 100% உறுதி!" கலாய்த்து தள்ளிய யோகி ஆதித்யநாத்!

"வந்துட்டார் ராகுல் காந்தி, பா.ஜ.க வெற்றி 100% உறுதி!" கலாய்த்து தள்ளிய யோகி ஆதித்யநாத்!

Update: 2019-10-15 03:39 GMT


மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி - சிவ சேனா கூட்டணியை ஆதரித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  பிரசாரம் செய்து வருகிறார். அவர் நேற்று யவத்மால் மாவட்டம் உமர்கெட் பகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:-


மராட்டியத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல் காந்தி வந்துள்ளதாக அறிந்தேன். அவர் மராட்டியத்திற்கு வந்து இருக்கிறார் என்றால் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க மற்றும் கூட்டணியின் வெற்றி 100 சதவீதம் உறுதியாகி விட்டது. ராகுல் காந்தி எந்த கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்கிறாரோ அந்த கட்சி தோல்வியை தான் சந்திக்கும். ராகுல் காந்தியின் வருகையால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் தோல்வி உறுதியாகி உள்ளது என்றார்.


Similar News