சுட்டுக் கொல்லப்பட்ட கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி, வீடு -யோகி ஆதித்யநாத்

சுட்டுக் கொல்லப்பட்ட கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி, வீடு -யோகி ஆதித்யநாத்

Update: 2019-10-24 01:50 GMT

உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தவர் கம்லேஷ் திவாரி  இதற்கு முன்பு இவர் இந்து மகாசபையில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்,இதற்கிடையே, லக்னோவின் குர்ஷெத் பாக்கில் உள்ள  கம்லேஷ் திவாரியின் வீட்டிற்குள் கடந்த 18-ம் தேதி நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் கம்லேஷ் திவாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.



மேலும், இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வைத்து பயங்கரவாத தடுப்பு முகமை கைது செய்துள்ளது,இந்நிலையில், லக்னோவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவர் கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்  என உ.பி. அரசு அறிவித்துள்ளது. 



இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், சுட்டுக் கொல்லப்பட்ட கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.


Similar News