Kathir News
Begin typing your search above and press return to search.

கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை பதம் பார்க்கும் கொரோனா- இறந்தவர்களை எரியூட்ட கத்தோலிக்க திருச்சபை அனுமதி!

கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை பதம் பார்க்கும் கொரோனா- இறந்தவர்களை எரியூட்ட கத்தோலிக்க திருச்சபை அனுமதி!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  15 April 2021 2:12 PM GMT

கொரோனா வைரஸ் பரவல் பலரின் மத நம்பிக்கைகளை பதம் பார்த்து வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்பால் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பிரச்சனையை சந்திக்கின்றனர். ஏனென்றால் இந்த இரு மதத்தினருமே இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள்.

கடந்த ஆண்டு முதல் அலையில் தாக்கத்தில் உயிரிழந்தவர்கள் பலர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் பிரபல நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலிஸ் என்பவரை கல்லறையில் புதைக்க விடாமல் அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினரை தாக்கிய அசம்பாவிதம் நிகழ்ந்தது. இது போக பலர் புதைக்க இடம் கிடைக்காமலும் அவதிப்பட்டனர்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில் ஆபிரகாமிய மதங்களை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் இந்தப் பிரச்சினை தலை தூக்கி இருக்கிறது. சென்னை, மும்பை போன்ற நகரங்களில் இடப் பிரச்சினை இருப்பதால் புதைத்த இடத்திலேயே மீண்டும் புதைப்பது, Vault முறையைப் பயன்படுத்தி மார்ச்சுவரியில் உள்ளது போன்று பெட்டியில் உடல்களைப் புதைப்பது போன்ற வழக்கங்கள் நடைமுறையில் உள்ளன.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களை இந்த முறையில் அடக்கம் செய்ய முடியாது என்பதால் அகமதாபாத் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்கள் தங்கள் உறவினர்கள் கொரோனா தொற்றால் இறக்கும் பட்சத்தில் சடலத்தை எரியூட்டலாம் என்று திருச்சபை அனுமதி அளித்துள்ளது. இதே போன்று இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் கொண்ட பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எரியூட்டலாம் என்று அச்சமூகத்தின் மத குருக்கள் அனுமதி அளித்துள்ளனர்.

கத்தோலிக்க கல்லறைகளில் இடப்பற்றாக்குறை இருக்கிறது என்றும் எனவே கொரோனா தொற்றால் இறந்தவர்களை அவர்களது விருப்பத்துக்கு உட்பட்டு எரிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் கத்தோலிக்க திருச்சபை சுற்றறிக்கை விடுத்துள்ளது. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்து புதைக்கப்பட்ட மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் புதைக்கப்பட்டால் மட்டுமே கிறிஸ்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தை தீவிரமாக பின்பற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News