Kathir News
Begin typing your search above and press return to search.

ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயம் இடிப்பு -போலீசார் குவிப்பு!

ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயம் இடிப்பு -போலீசார் குவிப்பு!
X

ShivaBy : Shiva

  |  21 April 2021 9:28 AM GMT

சென்னை வியாசர்பாடியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.


சென்னை வியாசர்பாடி எம்.ஜி.ஆர் நகரில் குடிசை மாற்று வாரியம் சார்பாக கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்தில் 180க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ‌ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த குடிசை மாற்று வாரியம் கட்டிடங்கள் அனைத்தும் மிகவும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே தமிழக அரசு சார்பாக இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு புதிதாக 288 குடியிருப்புகளுடன் கூடிய ஐந்து மாடிக் கட்டிடம் சுமார் 45.31 கொடி செலவில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனால் பழைய குடிசை மாற்று வாரியம் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வளாகத்தில் கடந்த 2000வது ஆண்டில் அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று இருந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. சுமார் 1200 சதுர அடியில் 'அப்போஸ்தல விடுதலை தேவ சபை' என்ற பெயரில் இந்த தேவாலயத்தை இக்னேஷியஸ் சந்தோஷ் என்பவர் நடத்தி வந்தார்.

எந்த ஒரு அனுமதியும் இன்றி அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நேற்று அப்புறப்படுத்தினர். இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் தேவாலயம் கட்டி, வெளிநாடுகளிலிருந்து நிதிகள் வாங்கி கொண்டு, அதுவும் போதாதென்று தேவாலயத்திற்கு வருபவர்களிடம் தசமபாகம் என்று ஒரு குறிப்பிட்ட சதவிகித பணத்தை பெற்றுக்கொண்டு மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இதுபோன்ற போலியான மத போதகர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News