ஆயில் மசாஜ் செய்து ஜெபம் செய்யுங்கள் கொரோனா வராது - மோகன் சி லாசரஸ் அட்வைஸ்!
By : Shiva
கொரோனா வைரஸுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் பல நாட்களாக ஆராய்ச்சிகள் செய்து தடுப்பூசிகள் கண்டுபிடித்த நிலையில் ஆயில் மசாஜ் செய்து ஜெபம் செய்தால் கொரோனா நோய் குணமாகும் என்று கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு எதிராக பல்வேறு பணியாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். ஆனால் இவை அனைத்தையும் மறந்து சில அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக இந்த கொரோனா தொற்று காலத்தையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கிறிஸ்தவ மத போதகராக இருந்து வருபவர் மோகன் சி லாசரஸ். கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு பெயர் பெற்ற இந்த மத போதகர் பல்வேறு மோசடிகளை செய்து மத மாற்றங்கள் செய்து வருகிறார். மத மாற்றம் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ள இவர் தற்போது ஆயில் மசாஜ் செய்து ஜெபம் செய்ய கூறியதால் ஒருவருக்கு கொரோனா தொற்று சரியாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது அனைவரையும் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் தனக்கு வந்த கடிதத்தை படிப்பதை போல் தன் உரையைத் தொடங்கினார். அப்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இவர் கூறியதை போல ஆயில் மசாஜ் செய்து கொண்டு ஜெபம் செய்ததால் கொரோனா தங்களை விட்டு சென்றுள்ளதாக கடிதத்தை படித்து முடிக்கிறார்.
ஏற்கனவே சிடியை தொட்டால் கேன்சர் குணமாகும், வலிப்பு நோய் குணமாகும், இருதய நோய் என எல்லா பிரச்சனைகளும் தாங்கள் வைத்திருக்கும் சிடியை தொட்டு ஜெபம் செய்வதால் சரியாகும் என்று மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் இதுபோன்ற மத போதகர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலர் இந்த மதமாற்று மதபோதகரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.