Kathir News
Begin typing your search above and press return to search.

தளர்வுகளற்ற ஊரடங்கு - தி.மு.க-வினரே மதிக்காத அவலம்..!

தளர்வுகளற்ற ஊரடங்கு - தி.மு.க-வினரே மதிக்காத அவலம்..!
X

ShivaBy : Shiva

  |  25 May 2021 2:25 PM IST

தமிழக அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கை சிறிதளவும் மதிக்காமல் 25க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் கூட்டமாக மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு சென்று அங்கு முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்து அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு சரியாக அமல்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக போடப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் 24ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு முதலாம் நாளான நேற்று காலை 25க்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சமூக இடைவெளி இன்றி கூட்டமாகக் கூடி பெருங்குடி மண்டல அலுவலகத்திற்கு சென்று அங்கு முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்து கோஷமிட்டனர்.

பின் அங்குமிங்கும் சுற்றி வந்த அவர்கள் சமூக இடைவெளி இல்லாமலும் முக கவசம் அணியாமலும் உலவி வந்தனர். முதல்வரின் உத்தரவை அவரது கட்சிக்காரர்களே மதிக்காமல் முழு ஊரடங்கு காலத்தில் கூட்டமாக வந்து மண்டல அலுவலகத்தில் அட்டகாசம் செய்தது அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர்களிடமிருந்து நோய்த்தொற்றும் அபாயம் இருப்பதால் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

நோய்த் தொற்றில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்து வரும் இந்த வேளையில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு செயல்பாட்டுக்கு வந்த முதல் நாளே முதல்வர் ஸ்டாலின் படத்தை அலுவலகத்தில் வைப்பது அவ்வளவு முக்கியமான வேலையா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

நன்றி : தினமலர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News