Kathir News
Begin typing your search above and press return to search.

குழந்தைகள் மீதான பாலியல் இச்சையை தூண்டும் காமலீலை புகார் புகழ் வைரமுத்துவின் புது பாடல்? கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!

குழந்தைகள் மீதான பாலியல் இச்சையை தூண்டும் காமலீலை புகார் புகழ் வைரமுத்துவின் புது பாடல்? கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!
X

ShivaBy : Shiva

  |  25 May 2021 4:03 PM IST

பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய சர்ச்சைக்குரிய 'என் காதலா' என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடல் வரிகள் அனைத்தும் குழந்தைகளிடம் பாலியல் ரீதியான எண்ணத்தை தூண்டும் வகையில் மட்டுமல்லாமல் அதனை நியாயப்படுத்தும் விதமாக வரிகள் அமைந்துள்ளது என்றும் உடனடியாக இந்தப் பாடலை யூடியூப் இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டு வைரமுத்து மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து ஒரு யூட்யூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் 'என் காதலா' என்ற பெயரில் புதிதாக ஒரு ஆல்பம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்லும் சிறுமி ஒருவர் முடி நரைத்த வயதான 'கவிஞர்' ஒருவரைக் காதலிப்பதாக ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையில் பாடல் எழுதப்பட்டு 16 வயதான நட்சத்திரம் அனிகா சுரேந்திரனை வைத்து படமாக்கப்பட்டுள்ளது.

பாடலின் அடிப்படைக் கருத்தே pedophilia எனும் குழந்தைகளை பாலியல் கண்ணோட்டத்தில் பார்க்கும், பாலியல் துன்புறுத்தல் செய்யும் குரூர புத்தி உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், ஒன்றுமறியா அப்பாவிக் குழந்தைகளின் மனதில் கவிதை என்ற பெயரில் pedophilia சரி என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. ஆனால் இது போதாதென்று வெளிப்படையாகவே குழந்தைகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவது சரி என்று pedophiles இடையிலும், அவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது சரி என்று குழந்தைகள் மனதிலும் நச்சை விதைக்கும் விதமாக பாடல் வரிகள் அமைந்துள்ளன.

பாடலில் வரும் "வாய் முத்தம் வயது அறியுமா?", "ஆணும் பெண்ணும் சேர்வது ஆசைப் போக்கில் நேர்வது, காதல் நீதி என்பது காலம் தோறும் மாறுது" என்ற வரிகள் வெளிப்படையாகவே pedophiliaவை ஊக்குவிப்தோடு "ஆழி ரொம்ப மூத்தது ஆறு சென்று சேருது, ஆறு சென்று சேரும் போது யாரு கேள்வி கேட்பது" என்ற வரிகள் இலக்கியம் என்ற போர்வையில் pedophiliaவை சிறுவர், சிறுமிகள் பார்வையில் காதலாக காட்ட முயற்சிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

ஏற்கனவே வைரமுத்துவுடன் பணியாற்றிய பல பெண்கள் #MeToo சர்ச்சையின் போது வைரமுத்து தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பாடகி சின்மயி இது குறித்து புகார் அளித்திருந்தார். எனினும் வைரமுத்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகிய திமுக தலைமைகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் வைரமுத்துவின் உண்மையான முகம் குறித்து வெளிப்படுத்திய பெண்களையும் வைரமுத்து ரசிகர்களும் திமுகவினரும் வைரமுத்து மீது வேண்டுமென்றே அபாண்டமாக பழி போடுவதாக குற்றம்சாட்டி அந்தப் பெண்களை கேவலப்படுத்தும் வேலையிலும் ஈடுபட்டனர். அந்த தைரியத்தில் தான் வைரமுத்து தொடர்ந்து தனது கேவலமான பாலியல் எண்ணங்களை இலக்கியம் என்ற பெயரில் இவ்வாறு வெளியிடுகிறார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இவ்வளவு கீழ்த்தரமாக pedophiliaவை ஊக்குவிக்கும் வண்ணம் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் யூடியூபில் இருந்து நீக்கப்படுமா அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா என்று குழந்தைகள் உரிமைகள் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News