Kathir News
Begin typing your search above and press return to search.

பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசிய திமுக அமைச்சர் - அதிர்ச்சியில் ஜெயின் சமூகத்தினர்!

பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசிய திமுக அமைச்சர் - அதிர்ச்சியில் ஜெயின் சமூகத்தினர்!

ShivaBy : Shiva

  |  26 May 2021 2:11 PM GMT

சென்னையில் வசித்து வரும் வட மாநிலத்தவர் வசதியாக வாழ்வதற்கு வழி வகுத்துக் கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அவர்கள் வாக்கு செலுத்தாமல் பாரதிய ஜனதாவிற்கு செலுத்தி வருகிறார்கள் என்று நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசி உள்ளதால் அங்கு கூடியிருந்தவர்கள் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்




மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை மெட்ரோ இயக்கம் சார்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை-எளிய மக்களுக்கு உணவு, முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவை தொடங்கி வைத்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் இந்த தொகுதியில் இருக்கும் வடமாநிலத்தவர்கள் வசதியாக இருப்பதற்கு காரணம் இங்கு திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்தது தான் காரணம். ஆனால் அவர்கள் திமுகவிற்கு வாக்களிக்காமல் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்கின்றனர்.

ஆனால் நாங்கள் வாக்கு சேகரிக்க செல்லும்போது நாங்கள் உங்களுக்கு தான் வாக்களிக்கிறோம் என்று கூறுகிறார்கள். இந்த தொகுதியில் மொத்தம் 50 வாக்குகள் மட்டுமே திராவிட முன்னேற்ற கழகத்திற்கு விழுந்துள்ளதாகவும் மற்ற 350 வாக்குகளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எழுந்துள்ளதாகவும் அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.

மேலும் 2014, 2016, 2019 மற்றும் 2021 தேர்தல்களில் இந்த தொகுதியில் உள்ள வடமாநிலத்தவர்கள் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்காமல் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து உள்ளனர் என்று தெரிவித்தார். நீங்கள் எங்களை எவ்வளவு புறக்ணித்தாலும் நாங்கள் உங்களை புறக்கணிக்க மாட்டோம் என்று கூறிய அவர், "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்ற திருக்குறளை தெரிவித்து அங்கு கூடியிருந்த மக்களை சங்கடத்திற்கு உள்ளாக்கினார்.

இது தொடர்பாக இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்த மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை மெட்ரோ உறுப்பினர்கள் ANI தொலைக்காட்சிக்கு தெரிவிக்கையில் "உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருள்கள் வழங்கும் விழாவிற்கு அமைச்சரை தலைமை தாங்க அழைத்தோம். ஆனால் ஏழைகளுக்கு நிவாரணம் கொடுக்கும் விழாவில் அமைச்சர் அரசியல் பேசி விட்டார்" என்று தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் அனைத்து மக்களிடமும் சரிசமமாக நடந்து கொண்டு, அனைவருக்கும் உதவி செய்வதை கடமையாக வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆளுங்கட்சியினர் நடந்து கொள்ளாமல் தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யும் போது இது போன்ற சொற்களை பயன்படுத்துவது அரசியல் நாகரீகம் அற்ற செயல் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News