Kathir News
Begin typing your search above and press return to search.

தலைவர் பதவியைப் பயன்படுத்தி மதம் மாற்றிய இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர்- நீதிமன்றத்தில் வழக்கு!

தலைவர் பதவியைப் பயன்படுத்தி மதம் மாற்றிய இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர்- நீதிமன்றத்தில் வழக்கு!

ShivaBy : Shiva

  |  1 Jun 2021 1:30 AM GMT

இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் தனது பதவியையும், அலுவலகத்தையும் கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு பயன்படுத்தியதாக புகார்கள் வந்ததை அடுத்து அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. தனது பதவியை கிறிஸ்தவ மத மாற்றத்திற்காக ஜெயலால் பயன்படுத்தியதால் நீதிமன்றத்தில் ஆஜராகி இது குறித்து பதிலளிக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LRPF என்ற தன்னார்வ அமைப்பு ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் அளித்த இரண்டு நேர்காணல்களை மேற்கோள் காட்டி அவர் தனது பதவியை கிறிஸ்தவ மத மாற்றத்திற்காக பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது. அவர் தனது நேர்காணலில் தொழுநோய், காலரா மற்றும் பிற தொற்றுநோய்கள் உலகை பேரழிவிற்கு உட்படுத்தியபோது, ​​கிறிஸ்தவ மருத்துவர்கள் மற்றும் தேவாலயங்கள் மட்டுமே அவற்றிற்கு எதிராக நின்று போராடிய கிறிஸ்தவர்களின் தயாள குணத்தைக் காட்டினர்" என்று கூறியிருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்செய்தி அளிக்க வேண்டும் என்ற அவசரம் மத சார்பற்ற நிறுவனங்களில், அதாவது அரசு மற்றும் கிறிஸ்தவர் அல்லாதோரின் தனியார் மருத்துவமனைகள், கூட மதப் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். இதேபோல் ஹக்காய் இன்டர்நேஷனலுக்கு அளித்த ஒரு நேர்காணலில் ஒவ்வொரு தேசமும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி மூலம் மீட்கப்பட்டு நல்ல மாற்றம் அடைந்து உள்ளதாக அவர் கூறி இருந்தார்.

ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்த ஒரு யோசனையை அவர் விரும்பவில்லை என்று ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் ஆயுஷ் அமைச்சகத்தை குறிப்பிட்டு "அவர்கள் ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை என்று மாற்ற விரும்புகிறார்கள். அடுத்து, அவர்கள் அதை ஒரே மதமாக மாற்ற விரும்புவார்கள். அது சமஸ்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்டது, அது எப்போதும் பாரம்பரியமான இந்து மதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது" என்று தெரிவித்தார்.

எனவே "சமஸ்கிருத மொழியையும் இந்துத்துவாவின் கொள்கைகளையும் மக்களின் மனதில் அறிமுகப்படுத்த இது ஒரு மறைமுக வழி"‌ என்றே தனது நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவர் தனது நேர்காணலில் இந்து மதத்தை தாழ்த்தியும் கிறிஸ்தவ மதத்தை உயர்த்தி பேசியுள்ளது தெள்ளத் தெளிவாகிய நிலையில் இவர் இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பை மதமாற்ற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News