Kathir News
Begin typing your search above and press return to search.

மத நடவடிக்கைகளுக்கு கேரள அரசு நிதி அளிப்பது ஏன்? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

மத நடவடிக்கைகளுக்கு கேரள அரசு நிதி அளிப்பது ஏன்? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  2 Jun 2021 2:47 PM GMT

கேரள மாநிலத்தில் மதரசா ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது ஒரு குறிப்பிட்ட மத நடவடிக்கைகளுக்கு மாநில அரசு எதற்காக நிதி உதவி செய்கிறது என்று கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் கேரள மதரசா ஆசிரியர் நல நிதிக்கு மாநில அரசு ஏதேனும் பங்களிப்பு செய்துள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.





ஜனநாயகம், சமத்துவம், அமைதி மற்றும் மதசார்பின்மைக்கான குடிமக்கள்(Citizen Organisation for Democracy, Equality, Tranquility and Secularism) என்ற அமைப்பின் சார்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதரசா பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு ஊதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்குவதற்காக இயற்றப்பட்ட கேரள மதராசா ஆசிரியர்கள் நல நிதியம் சட்டம் 2019ஐ ரத்து செய்ய வேண்டும் என்று இந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முஹம்மது முஸ்டாக் மற்றும் நீதிபதி எடப்பகத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "இந்த மதரசா பள்ளியில் குர்ஆன் மற்றும் இஸ்லாம் தொடர்பான கல்வியை மட்டுமே வழங்குகின்றன என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதத்தை ஊக்குவிக்கும் பள்ளிக்கு அரசு எவ்வாறு நிதி அளிக்க முடியும். இது நாட்டின் மதசார்பின்மை கொள்கைகளுக்கு எதிரானது"என்று தெரிவித்தனர்.

கேரளாவில் செயல்பட்டு வரும் மதரசா பள்ளிகள் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளை விட முற்றிலும் மாறாக உள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் செயல்பட்டுவரும் மதரசா பள்ளிகள் மதசார்பற்ற மதக் கல்வியை அளித்து வருகின்றன என்று தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற மத செயல்களில் ஈடுபட்டு வரும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு எதற்கு நிதி அளித்து வருகின்றது. அதன் நோக்கம் என்ன என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

Source : The New Indian express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News