Kathir News
Begin typing your search above and press return to search.

'கோவில்களை பாதுகாக்க வேண்டும்' என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு - பா.ஜ.க வரவேற்பு!

கோவில்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு - பா.ஜ.க வரவேற்பு!

ShivaBy : Shiva

  |  10 Jun 2021 10:24 AM GMT

கோவில்கள் மற்றும் புராதன சின்னங்களை பாதுகாப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு அதிரடி உத்தரவுகளை வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.மருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் இந்து கோவில்கள் மற்றும் பழமையான சின்னங்களை பாதுகாப்பது தொடர்பான பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. நன்றி தெரிவிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் நன்றி தெரிவித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் "சென்னை உயர்நீதிமன்றம் கோவில்கள் மற்றும் புராதன சின்னங்கள் பாதுகாக்க அதிரடி உத்தரவுகளை வழங்கியுள்ளதை பாரதிய ஜனதா கட்சி பெரிதும் வரவேற்று பாராட்டுகிறது.

நினைவு சின்னங்கள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். மாமல்லபுரம் உலக புராதான பகுதி மேலாண்மை ஆணையத்தை 8 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும். 17 பேர்கள் கொண்ட குழுவில் இந்திய, மாநில தொல்லியல் துறை பிரதிநிதிகள், வரலாற்றறிஞர்கள், பொதுப்பணித் துறை பிரதிநிதிகள், இணை கமிஷனர் க்கு இணையான அறநிலை துறை அதிகாரி, தகுதியான ஸ்தபதி, ஆகம சிற்ப சாஸ்திர நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம் பெற வேண்டும் என வழிகாட்டியுள்ளது.

குழுவின் ஒப்புதல் இல்லாமல் மத்திய, மாநில சட்டங்களின் கீழ் அறிவிக்கப்பட்ட நினைவு சின்னங்கள், கோவில்கள் சிலைகள், சிற்பங்கள் மற்றும் சுவர் சித்திரங்களில் எந்த மாற்றமும், சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள கூடாது என்று குறிப்பிட்டுள்ளார் அதன்படி பார்த்தால் நினைவுச் சின்னங்களுக்கு ஏற்படும் எந்த பணிகளுக்கும் முறைகேட்டிற்கும் இந்த குழுவே பொறுப்பு என்றாகிறது.

பாரம்பரியக் கோவில்கள், பாரம்பரிய மற்ற கோவில்கள் நினைவு சின்னங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க, புனரமைக்க நடவடிக்கைகள் அடங்கிய கையேட்டை 12 வாரங்களில் அரசு இறுதி செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் அறிவுறுத்தி உள்ளது வரவேற்கத்தக்கது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொல்லியல் துறை நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கோவில்களை ஆய்வு செய்து அதன் தரத்தை மதிப்பிட வேண்டும். மக்களின் பரிசீலனைக்காக தொல்லியல் துறை இணையதளத்தில் வெளியிடவேண்டும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வரலாற்று நினைவு சின்னங்கள், கோவில்கள் பற்றி தகவல்கள் தெரிவிக்க பொதுவான இணையதளத்தை தொல்லியல்துறை உருவாக்க வேண்டும்.

கோவில் நிதியை முதலில் கோவில் பராமரிப்பு, விழாக்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள்,இசைக் கலைஞர்கள் என ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பயன்படுத்த வேண்டும். உபரித் தொகை இருந்தால் மற்ற கோவில்கள் பராமரிப்பிற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில்களில் உள்ள ஊழியர்களுக்கு பெரும் ஆதரவு அளிப்பதாக இருக்கும். கோவில் நிலங்களுக்கு அரசோ அல்லது அறநிலையத்துறை கமிஷனர் தான் அரங்காவலர் எனவும் தானம் வழங்கியவர்களின் விருப்பத்திற்கு மாறாக, இந்த நிலங்களை விற்கவோ, கொடுக்கவோ கூடாது. கோவில் வசம் தான் இந்த நிலங்கள் எப்போதும் இருக்கவேண்டும். கோவில் நிலங்களை பொறுத்தவரை பொது நோக்கம் என்ற அம்சத்தை எடுத்து வரக்கூடாது என தெளிவாக அறிவுறுத்தியதன் காரணமாக கோவில் நிலங்களை சூறையாடுவது தவிர்க்கப்படும்.

குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை ஆறு வாரங்களில் தயாரித்து இணையதளத்தில் வெளியிட வேண்டும். அவர்களை வெளியேற்றவும், பாக்கியை வசூலிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில்களில் உள்ள சிலைகள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை புகைப்படங்கள் எடுக்க வேண்டும். திருடப்பட்ட சிலைகள் பொருட்களின் விவரங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும்.

அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட கோவில் ஊழியர்களை அனைவருக்குமான ஊதியத்தை குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நிர்ணயிக்க வேண்டும். அது அரசு ஊழியர்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்று இது நாள் வரை கவனிக்கப்படாத அர்ச்சகர்கள், ஓதுவார்கள் பெரும் நிம்மதியை அளிக்கும். இந்த திருப்புமுனை தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்தையும் அரசு செயல்படுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக பாஜக சார்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News