நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் அறிவிக்கைக்காக அரசு காத்திருப்பு!!

By : Bharathi Latha
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம் செய்யும் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார். மக்களவை சபாநாயகரால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கைக்காக அரசு காத்திருப்பதாக கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், டெல்லியில் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கூட்டத் தொடரின்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கப்படுவாரா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் இது குறித்த செயல்முறைகள் தற்பொழுது நடந்து வருவதாகவும், இது குறித்த அறிக்கைக்காக காத்து இருக்கும் நிலையில் எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது என்று கூறினார்.
சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ள விசாரணைக் குழுவில், உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
