சிறிய நோட்டுகள் தட்டுப்பாடு!! புதிய ஏடிஎம் மற்றும் ஹைபிரிட் ஏடிஎம் அறிமுகம்!!

By : Bharathi Latha
இந்தியாவில் சிறிய மதிப்புள்ள நோட்டுகளின் தட்டுப்பாடு பொதுமக்களை சிரமப்படுத்தி வரும் நிலையில் மத்திய அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
இந்த புதிய முயற்சியில் ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற சிறிய நோட்டுகளை நேரடியாக பொது மக்களுக்கு வழங்கும் புதிய வகை ஏடிஎம்கள் மற்றும் ஹைபிரிட் ஏடிஎம் என்ற புதிய மாடலையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான ஏடிஎம் மற்றும் காயின் வெண்டிங் மெஷின் ஆகிய இரண்டின் வசதிகளையும் இந்த ஹைபிரிட் ஏடிஎம் இயந்திரம் கொண்டிருக்கும் என்பதால் ரூ.500 போன்ற நோட்டுகளை சில்லறையாக மாற்ற பொதுமக்கள் வங்கிகள் அல்லது கடைகளுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை.
தற்போது இந்த திட்டம் பைலட் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மும்பையில், சிறிய நோட்டுகளை வழங்கும் புதிய இயந்திரத்தின் மாதிரி சோதனை நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக அரசு வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.
இந்த புதிய ஏற்பாடு, சிறிய நோட்டுகளின் பற்றாக்குறையால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாட சிக்கல்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
