Begin typing your search above and press return to search.
கூட்டணி விவாதத்தை தவிர்க்க கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய திமுக!!

By : Bharathi Latha
திமுக, காங்கிரஸ் கட்சிகளின் நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆகியவற்றை குறித்து விவாதிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற விவாதங்களால் ஏற்படும் சர்ச்சையால் எந்தவித பயனும் இல்லை என்றும், கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் தேர்தலில் வெற்றியடைவதை குறிக்கோளாக வைத்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் கூட்டணி குறித்த முடிவுகளை விரைவில் கட்சியின் முக்கிய தலைவர்கள் எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story
