Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை மாநகராட்சி கூட்டம்!! திமுக கவுன்சிலர்கள் அதிருப்தி!!

மதுரை மாநகராட்சி கூட்டம்!! திமுக கவுன்சிலர்கள் அதிருப்தி!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Jan 2026 7:54 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜன் தலைமையில் மதுரை மாநகராட்சி கூட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் மண்டலத்தலைவர்கள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில் திமுக கவுன்சிலர்கள் கூறியது என்னவென்றால், மேயர் மற்றும் மண்டலத்தலைவர்கள் நியமிக்காவிட்டாலும் பரவாயில்லை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த துணை மேயரை, பொறுப்பு மேயராக கூட்டம் நடத்துவதற்கு இதுவரை அனுமதிக்காதததால் மனதில் மனகஷ்டங்கள் இருந்தாலும் கூட கவுரவமாக வார்டுகளில் பணிகளை மேற்கொண்டோம் என கூறினர்.


மேலும் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்கலாம் என்றும் பேசி வருகின்றனர். திமுக கவுன்சிலர்கள், கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் உரிமைகளையும், கவுரவத்தையும் கட்சித்தலைமை தற்போது இழக்க செய்துள்ளதாக கருத்து தெரிவித்து உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News