Kathir News
Begin typing your search above and press return to search.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு!! டி.ஜி.பி., தகவல்!!

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு!! டி.ஜி.பி., தகவல்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Feb 2026 8:28 AM IST

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதுாறு கருத்துகளை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக டி.ஜி.பி., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.


மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக, ஜாதி மற்றும் மத ரீதியில் அவதுாறு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் மணி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.


இதைத் தொடர்ந்து, தமிழக டி.ஜி.பி., வெங்கட்ராமன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாகல் செய்தார். அதில், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், அவதூறு பரப்பியவர் என அனைவருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News