திண்டிவனம் பேருந்து நிலையதிற்கு இந்திரா காந்தி பெயரே தொடரும்!!

By : Bharathi Latha
திண்டிவனத்தில் கடந்த 55 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அதற்கு `முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம்' என பெயர் வைக்கப்பட்டது.
ஆனால், இந்திரா காந்தி பேருந்து நிலையம் என்ற பழைய பெயரையே வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கோரிக்கையாக வைத்தனர்.
இந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்திற்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் பெயர் நீக்கப்பட்டு, இந்திரா காந்தி பெயரே தொடர வேண்டும் என அரசாணை வெளியானது. இதற்கு தி.மு.கவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்திரா காந்தி பெயரே தொடர வேண்டும் என கோரிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவித்து செல்வப்பெருந்தகை பதிவு வெளியிட்டுள்ளார்.
