Kathir News
Begin typing your search above and press return to search.

குழந்தை திருமணம் தடுப்பு!! மூன்று கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!!

குழந்தை திருமணம் தடுப்பு!! மூன்று கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Feb 2026 7:04 AM IST

இந்தியாவை குழந்தைத் திருமணம் இல்லாத நாடக உருவாக்க மூன்று கட்டங்களாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கடந்த 2024 நவம்பர் 27 அன்று தேசிய அளவிலான இயக்கம் தொடங்கப்பட்டது.

அதில் 2025 நவம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விவாதங்கள், கட்டுரைப் போட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


அதைதொடர்ந்து கடந்த 2026 ஜனவரி 1 முதல் 31 வரை மத வழிபாட்டுத் தலங்கள், திருமணம் தொடர்பான சேவை வழங்குவோர், உணவுத் தயாரிப்போர் ஆகியோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


மேலும் 2026 பிப்ரவரி 1 முதல் மார்ச் 8 வரை கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் குழந்தை திருமணம் இல்லாத பகுதிகள் என்று தீர்மானம் நிறைவேற்றுவதை வலியுறுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது போன்ற விழிப்புணர்வு பல மக்களுக்கு சென்றடைந்துள்ளதாக மாநிலங்களவையில் அன்னபூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News