Begin typing your search above and press return to search.
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் சிபிஐ அதிரடி அறிக்கை!!

By : Bharathi Latha
மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் அஜித்குமாரின் மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளதாக சிபிஐ அறிக்கை தாக்கலில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் விசாரித்தனர். அதில் கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிபிஐ தரப்பில், நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை. புகார் முடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும் என நீதிபதி கூறினார்.
Next Story
