Kathir News
Begin typing your search above and press return to search.

ஆர்எஸ்எஸ் யாருக்கும் எதிரானது அல்ல!!மோகன் பாகவத் பேச்சு!!

ஆர்எஸ்எஸ் யாருக்கும் எதிரானது அல்ல!!மோகன் பாகவத் பேச்சு!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Feb 2026 5:49 PM IST

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பாகவத், இந்த அமைப்பானது யாருக்கும் எதிரானது அல்ல, மேலும் அதிகாரத்தை நாடவில்லை என்றும் தெரிவித்தார்.


ஆர்எஸ்எஸ்-ன் பணி தனித்துவமானது. எங்கள் புரிதலின் அடிப்படையில் இதுபோன்ற பணி உலகில் வேறு எங்கும் இல்லை என்று நாங்கள் கூறுவது வழக்கம். ஐந்து கண்டங்களில் இருந்தும் மக்கள் வந்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றி பல கேள்விகளைக் கேட்கிறார்கள் என்றார்.


பண்பாடு நம் அனைவரையும் இணைக்கிறது. இங்கு பல மொழிகள் உள்ளன, நாம் வணங்கும் தெய்வங்கள் பலவாக உள்ளன. ஆனாலும், நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஓர் அடையாளம் உள்ளது. அதை நாங்கள் இந்து என்று அழைக்கிறோம் என மோகன் பாகவத் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News