Kathir News
Begin typing your search above and press return to search.

எதிர்கால நலனுக்காக மின்சார வாகனங்கள் உற்பத்தியில் புதிய முனைப்புடன் செயல்படும் இந்தியா!

எதிர்கால நலனுக்காக மின்சார வாகனங்கள் உற்பத்தியில் புதிய முனைப்புடன் செயல்படும் இந்தியா!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 March 2021 10:50 AM GMT

இந்தியா தற்போது மின்சார வாகனங்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்திக் கொண்டு வருகிறது. உலகளவில் 2019ஆம் ஆண்டில் 2 மில்லியனுக்கு அதிகமான மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவும், இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அதன் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும். நமக்கு தூய்மையான காற்று அவசியம். இந்த இரண்டு விஷயங்களுக்காகவும் இந்திய அரசு தற்போது மின்சார வாகனங்கள் அல்லது பேட்டரி வாகனங்கள் உற்பத்தியில் அதிக கவனமும் மற்றும் ஊக்கமும் கொடுத்து வருகிறது. குறிப்பாக மின்சார வாகனங்களை வாங்க மக்களை ஊக்குவிப்பதற்காக இந்தியா 2019ஆம் ஆண்டு வரி விகிதத்தை குறைத்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஒருவர் ஒரு வருடத்தில் விற்பனை சுமார் 20 சதவீதம் அதிகரித்தது.


2019 ஆம் ஆண்டில் மொத்த எலக்ட்ரானிக் வாகனங்கள்(EV) 1.56 லட்சம் ஆகும். இவற்றில் 1.52 லட்சம் இரு சக்கர வாகனங்கள். 3,400 மின்சார கார்கள். 600 மின்சார பேருந்துகள் அடங்கும். எனவே இந்திய தன்னுடைய இலக்கை அடைய மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியதிருக்கும். அந்த பயணத்தின் ஒரு சிறு படியாக 2020ஆம் ஆண்டில் பேட்டரி வாகனங்களின் உற்பத்தியில் இந்தியா தற்போது அதிகரிக்க உள்ளது. பெரும்பாலும் பெரிய ஆட்டோமொபைல்ஸ் பிளேயர்கள், மின்சார வாகன மாதிரிகளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

பேட்டரி வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு இந்தியாவிற்கு லித்தியம் என்ற மூலப்பொருள் தேவை. அந்த பொருளை இந்தியா தற்போது வரை இறக்குமதி செய்து கொண்டுதான் வருகிறது. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை நம்பியுள்ளது. தற்போது வரை சீனாதான் உற்பத்தியில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. உலகின் மிகப்பெரிய மின்னணு வாகன தயாரிப்புகளில் நிறுவனங்களில் சீனாதான் தன்வசம் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு முன்பை விட தற்பொழுது பொறுப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக நான்கு விஷயங்களில், முதலில் சீன நாடுகளைத் தவிர்த்து பிற நாடுகளிடம் இருந்து வாங்க வேண்டும். இரண்டாவது இந்தியாவிலேயே லித்தியம் அயன் பேட்டரிகளை செய்வது.


தொழில்நுட்பத்துக்கு ஏற்ற மாதிரி மாற்று வழிகளை கையாளுவது. பிறகு உலகின் சிறந்த உற்பத்தியாளராக இந்தியாவை உருவாக்க முடியும். அந்த இலக்கை அடைய, 1.4 பில்லியன் டாலர் திட்டத்தை அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்பொழுது, இந்தியா தனது முதல் லித்தியம் சுத்திகரிப்பு நிலையத்தை குஜராத்தில் அமைத்து வருகிறது.

கானிஜ் பிடேஷ் இந்தியா லிமிடெட் அல்லது காபில் என்ற கூட்டு முயற்சி மூன்று அரசு நிறுவனங்களுக்கு இடையே உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரிகளை உருவாக்குவதற்கு லித்தியம் மற்றும் கோபால்ட் சுரங்கங்களை வெளிநாடுகளில் வாங்குவதே இதன் நோக்கம். ஆகவே 2025ம் ஆண்டில் உலகளாவிய வாகன விற்பனையில் பேட்டரி வாகனங்கள் 10 சதவீதத்தை தக்கவைத்துக்கொள்ளும். 2040 ஆம் ஆண்டு விற்கப்படும் வாகனங்களில் கிட்டத்தட்ட 60% மின்சார வாகனங்களாக தான் இருக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News