Kathir News
Begin typing your search above and press return to search.

அழிந்துபோகும் நிலையில் இருந்த விவசாய தயாரிப்புகளுக்கு ஆபரேஷன் பசுமை திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு!

அழிந்துபோகும் நிலையில் இருந்த விவசாய தயாரிப்புகளுக்கு ஆபரேஷன் பசுமை திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு!

MuruganandhamBy : Muruganandham

  |  2 March 2021 1:15 AM GMT

அழிந்துபோகும் நிலையில் இருந்த தயாரிப்புகளுக்கு ஆபரேஷன் பசுமை திட்டத்தை விரிவுபடுத்தியது, 1000 மண்டிகளை இ-நாம்-உடன் இணைத்தது போன்ற விவசாயத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய விஷயங்களை பிரதமர் எடுத்துரைத்தார்.

மீன் பிடி தொழில் மற்றும் ஏற்றுமதியில் உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும், பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கான சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கு குறைவாக உள்ளது என பிரதமர் வருத்தத்துடன் கூறினார். இந்த சூழலை மாற்ற, தயார் நிலை உணவுகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், பழங்கள், கடல் உணவுப் பொருட்கள் , பால் பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிக்க, சீர்திருத்தங்களுடன் ரூ.11,000 கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

'ஆபரேசன் கிரீன்ஸ்' திட்டத்தின் கீழ், காய்கறிகள் மற்றும் பழங்கள் போக்குவரத்துக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாக அவர் கூறினார். கடந்த 6 மாதங்களில் மட்டும், சுமார் 350 கிசான் ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், இதன் மூலம் 1,00,000 மெட்ரிக் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டன என அவர் கூறினார்.

ஒட்டு மொத்த நாட்டின் விவசாய உற்பத்தி பொருட்களுக்கும் குளிர்பதன கிடங்காக இந்த கிசான் ரயில் செயல்படுகிறது. தற்சார்பு சார்பு இந்தியா பிரச்சாரத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறி தொகுப்புகளை உருவாக்க வலியுறுத்தப்படுகிறது என பிரதமர் கூறினார்.

பிரதமரின் சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு உதவிகள் அளிக்கப்படுகின்றன. டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் இதர விவசாய இயந்திரங்களை சிறு விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு வாடகைக்கு விடுவது ஆகியவற்றுடன், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சிறு விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

விவசாய பொருட்களை மலிவான விலையில் சந்தைக்கு கொண்டு செல்ல ஒப்பந்த லாரிகளை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் கூறினார். மண்வள அட்டை வழங்கும் வசதியை நீட்டிக்க வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார். மண்வளம் பற்றிய விவசாயிகளின் விழிப்புணர்வை அதிகரிப்பது, விவசாய பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என அவர் கூறினார்.

வேளாண்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில், தனியார் துறையின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.கோதுமை மற்றும் அரிசி மட்டும் பயிரிடாமல், இதர பொருட்கள் உற்பத்தி செய்யும் வாய்ப்பையும் நாம் வழங்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

ஆர்கானிக் உணவு முதல், காய்கறிகள் வரை பல விவசாய உற்பத்தி பொருட்களை அவர் குறிப்பிட்டார். கடற்பாசி மற்றும் தேன் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கும் என அவர் கூறினார். தனியார் துறை பங்களிப்பு அதிகரிப்பது, விவசாயிகளின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் என அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News