அனுமதியின்றி கட்டப்படும் சர்ச் - தடுத்து நிறுத்த இந்துக்கள் கோரிக்கை!
By : Shiva
மானாமதுரையில் அனுமதி இன்றி சர்ச் கட்டும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரையில் தயாபுரம் என்னும் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்ச் கட்டுமான பணி நடைபெற்றது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் சர்ச் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இரண்டு ஆண்டுகள் சர்ச் கட்டும் பணி நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் சர்ச் கட்டும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் மதக் கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக சர்ச் கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மானாமதுரை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த புகார் மனுவில், "கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் சர்ச் கட்டும் பணிக்காக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கட்டுமான பணிக்கான அனுமதி காலம் காலாவதி ஆகி விட்டதால் சர்ச் கட்டும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சர்ச் கட்டும் பணி மீண்டும் நடைபெற்றால் இந்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் என்பதால் அதிகாரிகள் இந்த கட்டுமான பணியை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சர்ச் கட்டுவதற்கான அனுமதியை நீட்டித்து வழங்க கூடாது என்றும் இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். காலாவதியான அனுமதியை வைத்துக்கொண்டு சர்ச் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.