ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரொக்கப்பணம்! மதபோதகரை வளைத்து பிடித்த காவல்துறையினர்!
By : Shiva
கிறிஸ்தவ மத போதகரான மோகன்சிலாசரஸ் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உரிய ஆவணங்கள் இன்றி ₹1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை தனது காரில் எடுத்து சென்றதால் அதனை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தமிழகத்தில் மிகவும் செல்வந்தராக இருந்து வருபவர் மோகன் சி லாசரஸ் என்னும் கிறிஸ்தவ மத போதகர் ஆவார். இவர் தனது ஜெப கூட்டங்களில் இயேசு கிறிஸ்துவை பற்றி பேசுகிறாரோ இல்லையோ இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தி இந்துக்களின் மத உணர்வை காயப்படுத்தும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் மீது இவருடைய மச்சானே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களும் பாலியல் குற்றச்சாட்டுகளும் சுமத்தியுள்ளார் என்பதும் எப்போதும் சர்ச்சைகளுக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான செந்தில்குமார் உத்தரவின்படி நிலையான கண்காணிப்புக் குழு, பறக்கும் படை, செலவினங்களை கண்காணிக்கும் குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு என அனைவரும் உடனிருந்தனர்.
அப்போது திருநெல்வேலியில் இருந்து வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்த போது அதில் ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ₹ 1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அப்போது அந்தப் பணத்தை எடுத்து வந்தது இயேசு விடுவிக்கிறார் மதபோதகர் மோகன் சி லாசரஸ் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரிடம் இருந்து பணத்தை மீட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கின்றதா, வெளிநாட்டில் இருந்து மதம் மாற்றுவதற்கு கொண்டு வரப்பட்ட பணமா அல்லது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட பணமா என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.