Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவிலிருந்து உலகைக் காக்க வந்த இந்தியா: அமெரிக்காவின் மிகப்பெரும் விஞ்ஞானி புகழாரம்!

கொரோனாவிலிருந்து உலகைக் காக்க வந்த இந்தியா: அமெரிக்காவின் மிகப்பெரும் விஞ்ஞானி புகழாரம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 March 2021 12:33 PM GMT

முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதன் மூலம் கொடிய கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து உலகை மீட்ட இந்தியாவின் பங்களிப்புகளை மற்ற நாடுகள் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று ஒரு உயர்மட்ட அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் வெடித்த பிறகு இந்தியா தற்போது உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படும் அளவுக்கு, வல்லரசு நாடுகள் உட்பட உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் மருந்துகளை வழங்கி வருகிறது. இந்தியா பரந்த அனுபவமும் மருத்துவத்தில் ஆழ்ந்த அறிவும் கொண்டது.


இந்த நாடு உலகின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பாளர்களில் ஒன்றாகும். மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்காக அதிக எண்ணிக்கையிலான நாடுகள் ஏற்கனவே இதை அணுகியுள்ளன என அவர் கூறினார். அண்மையில் ஒரு வெபினாரின் போது ஹூஸ்டனில் உள்ள பேய்லர் காலேஜ் ஆப் மெடிசின் மருத்துவப் பள்ளியின் டீன் டாக்டர் பீட்டர் ஹோடெஸ், இரண்டு MRNA தடுப்பூசிகள் உலகின் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளை கொரோனாவிலிருந்து விடுவித்து வருகிறது என்று கூறினார்.

இந்தியாவின் தடுப்பூசிகள், BCM மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்ற உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களுடனான ஒத்துழைப்புடன் உலகை மீட்டது மற்றும் அதன் பங்களிப்புகளை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று கூறினார். தடுப்பூசி வளர்ச்சியில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் மற்றும் விஞ்ஞானி என இருமுகம் கொண்ட டாக்டர். ஹோடெஸ், கொரோனா தடுப்பூசி விநியோகம், வைரஸை எதிர்ப்பதில் இந்தியா உலகிற்கு வழங்கிய பரிசு எனக் கூறினார்.


பிரிட்டிஷ் மருந்தக நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் கோவாக்சின் ஆகியவற்றிலிருந்து உரிமம் பெற்ற பின்னர் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்டிற்கு இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியது.

மேலும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானிகள் இணைந்து முழுவதும் உள்நாட்டிலேயே மற்றொரு தடுப்பூசியையும் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. வெபினாரை இந்தோ அமெரிக்கன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆஃப் கிரேட்டர் ஹூஸ்டன் ஏற்பாடு செய்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News