காவல்துறைக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! ஆட்சியரிடம் புகார்!
By : Shiva
அவிநாசியில் அனுமதி பெறாமல் காவலர் குடியிருப்பு நிலத்தில் மசூதி விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருவதால் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த கோரி புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசியில் மங்கலம் ரோட்டில் காவல் நிலையத்திற்கும் காவலர் குடியிருப்பிற்கும் சொந்தமாக 95.05 சென்ட் நிலம் உள்ளது. இதன் அருகில் மசூதிக்கு சொந்தமாக 14 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலையில் காவல் துறைக்கு சொந்தமான 4.05 சென்ட் இடத்தை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் மசூதி நிர்வாகத்துடன் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து மசூதிக்கு சொந்தமான இடம் என்று முறைகேடாக ஆவணங்களை திருத்தி அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் தற்போது மசூதி நிர்வாகத்திற்கு 18.05 சென்ட் நிலம் இருப்பது போன்று ஆவணங்கள் திருத்தப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் காவல் துறைக்கு சொந்தமான இடத்தை மசூதி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் தற்போது மசூதி விரிவாக்கம் என்ற பெயரில் இரண்டு மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இதனால் காவல்துறை குடியிருப்பில் இருந்து மங்கலம் சாலைக்கு செல்லும் அவசரகால பாதை முழுவதும் மசூதி நிர்வாகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால் காவலர் குடியிருப்புக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காவல் துறைக்கு சொந்தமான இடத்தை சட்டவிரோதமாக மசூதி நிர்வாகத்திற்கு முறைகேடாக மாற்றி தந்த வருவாய் துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அனுமன் சேனா மாவட்ட செயலாளர் தியாகராஜன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.