Kathir News
Begin typing your search above and press return to search.

பொன்விழா வெற்றி ஆண்டு: கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்கள் கவுரவிப்பு!

பொன்விழா வெற்றி ஆண்டு: கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்கள் கவுரவிப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 March 2021 11:34 AM GMT

1971ம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போர் வெற்றியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில், அப்போரில் பங்கேற்ற இராணுவ வீரர்கள் கோவையில் இன்று கெளரவிக்கப்பட்டனர். 1971ம் ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போரில், பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதோடு, வங்கதேசம் என்ற தனிநாடு உருவாக வழிவகுத்தது. மேலும் இரண்டாம் உலகம் போருக்குப்பின், ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் இந்தப் போரில் சரணடைந்ததனர்.


இப்போரின் 50 வது பொன்விழா வெற்றி ஆண்டை, நாடு டிசம்பர் 16ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா ஜோதியிலிருந்து, பிரதமர் மோடி ஏற்றி வைத்த 4 வெற்றி ஜோதிகள் அப்போரில் பரம் வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகள் பெற்ற வீரர்களின் கிராமங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் விருது பெற்றவர்களின் கிராமங்களில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு, தேசிய போர் நினைவுச் சின்னத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.


இந்த பொன்விழா வெற்றி ஆண்டை முன்னிட்டு, பல்வேறு நினைவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக்கல்லூரி அரங்கில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விமானம், கப்பல், தரைப்படை என முப்படை வீரர்களும் பங்கேற்றனர். வெற்றி ஜோதி கொண்டு வரப்பட்டு மேடையில் ஏற்றி வைக்கப்பட்டது. இதையடுத்து அப்போரில் பங்கேற்ற சுமார் 150 இராணுவ வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News