Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தல் விதியின் கீழ் ஊடகங்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை! மீறினால் சிறைதண்டனை கூட அனுபவிக்க நேரிடும்!

தேர்தல் விதியின் கீழ் ஊடகங்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை! மீறினால் சிறைதண்டனை கூட அனுபவிக்க நேரிடும்!

MuruganandhamBy : Muruganandham

  |  18 March 2021 1:51 AM GMT

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணை பிப்ரவரி 26 அன்று வெளியிடப்பட்டது.

அதன் படி, அசாமில் மூன்று கட்டங்களாக மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரையிலும், புதுச்சேரி, கேரளா மற்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 அன்றும், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரையிலும் தேர்தல் நடைபெறுகிறது.

இது தொடர்பாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் 126-வது பிரிவை கவனத்தில் கொள்ளுமாறு ஊடகங்கள் கேட்டுக்கொள்ளப் படுகின்றன.

ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் எவ்விதமான தேர்தல் விஷயங்களை தொலைக்காட்சி அது போன்ற கருவிகள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் வெளியிட இச்சட்டம் தடை செய்கிறது.

தடை செய்யப்பட்டுள்ள "தேர்தல் விஷயங்கள்" இந்தப் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை பாதிப்பதை நோக்கமாகக் கொண்ட எந்த ஒரு விஷயமும் இதன் கீழ் வரும்.

பிரிவு 126-ன் வரைமுறைகளை மீறுவது இரண்டு ஆண்டுகால சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிப்பதற்குரிய குற்றமாகும்.

எனவே, பிரிவு 126-ல் குறிக்கப்பட்டுள்ள 48 மணி நேரத்தில் விவாதங்களில் பங்கேற்போர் உள்ளிட்ட கருத்துக்கள், வேண்டுகோள்கள் குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளர் ஆகியோரின் தேர்தல் எதிர்காலத்தை மேம்படுத்துவதாகவோ அல்லது பாதிப்பதாகவோ அமைந்திருப்பதும் தேர்தல் முடிவுகளை பாதிக்கக் கூடியதாக இருப்பதும், இப்பிரிவில் அடங்கியுள்ளன.

மேலும், கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுதல் மற்றும் விவாதங்கள், பகுப்பாய்வுகள், காட்சிப்பொருட்கள், ஒலிக்குறிப்புகள் ஆகியவற்றை வெளியிடுவதும் இப்பிரிவில் அடங்கும்.

இந்திய பத்திரிகை சபை 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட அனைத்து நெறிமுறைகளை அனைத்து அச்சு ஊடகங்களும் கடைப்பிடிக்க வேண்டுமென அந்த ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது

அதேபோல, அனைத்து மின்னணு ஊடகங்களும், செய்தி ஒளிபரப்பாளர் சங்கம் 2014 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தேர்தல் ஒளிபரப்பாளர்களுக்கான நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென அந்த ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

அனைத்து சம்பந்தப்பட்ட ஊடகங்களும் தங்களுக்குரிய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News