Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா: கோவில் திருவிழாவில் பக்தர்களை தடுத்த போலீசார்!

கேரளா: கோவில் திருவிழாவில் பக்தர்களை தடுத்த போலீசார்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 March 2021 1:36 PM GMT

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கல்லூருக்கு அருகிலுள்ள ஸ்ரீ குரும்பா பகவதி கோயிலில் மீனா பரணி திருவிழா வருடாவருடம் நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று குரும்பா பகவதி அம்மனுக்கு விலங்குகள் தியாக விழா போன்றவை நடைபெற்ற போது பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவில் திருவிழாவில் அரங்கேற்றிய, 9 பேரை போலீசார் கைது செய்துள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்ட கலெக்டர் எஸ்.சனவாஸ் இந்த நிகழ்வினை உடனே தடுத்து நிறுத்துமாறு போலீசாருக்கு அனுமதி கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விலங்கு தியாகம் என்ற பெயரில் அவர்கள் செய்த செயல்களை தடுத்து நிறுத்தி உடனடியாக கைது செய்தனர்.

இந்துக்களின் முறைப்படி, தன்னுடைய நேர்த்திக் கடனைத் தீர்ப்பதற்காக கடவுளின் முன்னால் சில வேண்டுதல்களை முன்வைப்பார்கள். அந்த வேண்டுதல்கள் பூர்த்தி அடைந்தவுடன் மீண்டும் கோயிலுக்கு வந்து காணிக்கையாக சேவல், ஆடு போன்ற விலங்குகளை அம்மனுக்கு காணிக்கையாக கொடுப்பது வழக்கம்.



அது ஒரு பண்டிகையாக திருச்சூரில் ஸ்ரீ பகவதி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி நேர்த்திக்கடனை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர் இந்துக்களின் மரபில் மட்டும் இத்தகைய நடவடிக்கைகள் பின்பற்றப்படுவது கிடையாது. மற்ற மதங்களிலும் இது இந்த பழக்கம் இருக்கிறது. ஆனால் இந்துக்களின் மீது மட்டும் போலீசார் இத்தகைய வன்முறையில் கையாளுவது ஏன்? என்று புரியவில்லை. முன்பு கொரோனா தொற்று என்ற காரணத்திற்காக கோவில்களை திறப்பதை தாமத படுத்தினார்கள்.

ஆனால் மற்ற சமூகங்களின் திருவிழாக்கள், அல்லது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தேர்தல் பேரணிகள் என்று வரும்போது, ​​அதே விதிமுறை புத்தகம் எங்கும் போனது. மேலும் அந்த சமூகங்களின் மதத் தலைவர்களுடன் மரியாதைக்குரிய ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தை பொதுமக்களிடம் ஒப்படைக்கும்படி அங்குள்ள பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News