Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க என்றாலே ரவுடியிசம் - மனம் குமுறும் தமிழக மக்கள்! ஆட்சி அதிகாரம் இல்லாமலே தமிழகம் முழுக்க அட்டகாசம்!

தி.மு.க என்றாலே ரவுடியிசம் - மனம் குமுறும்  தமிழக மக்கள்! ஆட்சி அதிகாரம் இல்லாமலே தமிழகம் முழுக்க அட்டகாசம்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  20 March 2021 6:45 AM IST

கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என தங்களது தேர்தல் பணிகளை முழுவிச்சில் செய்துவருகின்றனர்.

இதில் 125க்கும் மேலான தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன. அதன்படி கரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜியும், அதிமுக சார்பில் எம்.ஆர். விஜயபாஸ்கரும் போட்டியிடுகின்றனர். இருவரும் கரூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

செந்தில் பாலாஜி அண்மையில் பேசும்போது, "மே மாதம் 10-ந் தேதி 11 மணி அளவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார். அடுத்த 5 நிமிடத்தில் மணல் அள்ள எல்லோரும் ஆற்றுக்கு செல்லுங்கள். எந்த அதிகாரிகளும் அதை தடுக்கமாட்டார்கள். அப்படி தடுத்தால் அந்த அதிகாரிகள் அங்கே இருக்கமாட்டார்கள்" என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

இவருடைய பேச்சு, மணல் கொள்ளையைத் தடுக்க ஐகோர்ட் விதித்திருக்கும் தடையை மீறி செயல்படுங்கள் என்று தூண்டி விடுவது போலவும் அமைந்து உள்ளது. இது கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும்.

திமுக என்றாலே ரவுடியிசம் என்று கூறும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டது. நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து என்று எதை எடுத்தாலும் அதில் மிரட்டல் பாணியை கடைபிடிப்பது திமுகவின் வழக்கம். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் அவர்கள் இப்படி மிரட்டுகிறார்கள்

இந்த நிலையில், மணல் அள்ளுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News