Kathir News
Begin typing your search above and press return to search.

இது புது டிரெண்ட்! ஆசன வாய் போய், தலையில் தங்கம் கடத்தும் மர்ம நபர்கள்! தொடர்ச்சியாக சிக்கிய பின்னணி!

இது புது டிரெண்ட்! ஆசன வாய் போய், தலையில் தங்கம் கடத்தும் மர்ம நபர்கள்! தொடர்ச்சியாக சிக்கிய பின்னணி!

MuruganandhamBy : Muruganandham

  |  22 March 2021 1:46 AM GMT

உளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் பெயரில் துபாயிலிருந்து விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மஹ்ரூப் அக்பரலி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஹஸ்ஸன் ரஃபியுதீன் ஆகியோர் விமான நிலைய சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்களது சிகை அலங்காரம் மீது சந்தேகம் எழுந்தது. அவர்களை சோதனையிட்டதில் அவர்கள் விக் அணிந்திருந்ததும், தலையின் ஒரு பகுதி மழிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அவர்கள் அணிந்திருந்த விக்குகளின் அடியில் 698 கிராம் எடையில் தங்கப் பசை அடங்கிய இரண்டு பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றிலிருந்து 595 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது.

இதே போல கடந்த வெள்ளிக்கிழமை அன்று துபாய் மற்றும் சார்ஜாவில் சென்னை வந்த விமானங்களில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையத் அகமதுல்லா, சேலத்தைச் சேர்ந்த சந்தோஷ் செல்வம் மற்றும் சென்னையை சேர்ந்த அப்துல்லா ஆகியோர் விமான நிலையத்தின் வெளி வாயிலில் சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்களது சிகை அலங்காரம் சந்தேகப்படும்படி இருந்ததால் அவர்களை சோதனையிட்டதில் தலையின் ஒரு பகுதி மழிக்கப்பட்டிருந்ததும், அவர்கள் விக் அணிந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அணிந்திருந்த விக்குகளின் உள்ளே 2410 கிராம் எடையில் தங்க பசை அடங்கிய 3 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவற்றிலிருந்து ரூ. 96.57 லட்சம் மதிப்பில் 2.08 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு, சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.

மற்றொரு வழக்கில் ஷார்ஜாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருந்த நான்கு பயணிகள் குடியேற்ற கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு பிறகு பாதுகாப்பு வளாகத்தை நோக்கி செல்கையில் புறப்பாட்டு முனையத்தில் சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்களது சிகை அலங்காரத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவர்களிடம் நடைபெற்ற சோதனையில் 4 பயணிகளும் விக் அணிந்திருந்தது தெரியவந்தது. அவர்களது விக்குகளின் உள்ளே 67500 சவுதி ரியால்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அவர்களது முழுக்கால் சட்டையின் பைகளில் இருந்து 4750 அமெரிக்க டாலர்கள், 6500 திராம்கள், 800000 டாக்காக்கள் கைப்பற்றப்பட்டன. இப்படி தொடர்ச்சியாக தலையில் கடத்தல் பொருட்களை எடுத்துச் செல்லும் நூதன முறை தற்போது கையாளப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News