Kathir News
Begin typing your search above and press return to search.

கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை லெப்ட் அண்டு ரைட்டு வாங்கிய ஸ்டாலின்! புள்ள பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டாரு!

கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை லெப்ட் அண்டு ரைட்டு வாங்கிய ஸ்டாலின்! புள்ள பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டாரு!

MuruganandhamBy : Muruganandham

  |  22 March 2021 2:01 AM GMT

கரூர் சட்டமன்ற தொகுதியின் தற்போதைய வேட்பாளரான செந்தில் பாலாஜி , முன்னொரு காலத்தில் அதிமுக கரூர் மாவட்ட செயலாளராக இருந்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின் குளித்தலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தில் செந்தில் பாலாஜியை மு.க.ஸ்டாலின் சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ கிரெடிட்: சமயம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, அ.தி.மு.க.,வில் கரூர் மாவட்ட செயலராகவும், 2011 - 14ல் போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தார்.

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறைக்கு, ஜி.பி.எஸ்., கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என, கருணாநிதியே கூறியுள்ளார். தி.மு.க., தொழிற்சங்கமும் போராட்டங்களை நடத்தியது. தற்போது, தி.மு.க.,வில் சேர்ந்து, அ.தி.மு.க.,வை சுயநலத்துக்காக தாக்கி பேசி வருகிறார்.

இந்த நிலையில் தி.மு.க.,வில் தற்போது உள்ள, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கருணாநிதி, ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த பழைய வீடியோக்களை வெளியிட, அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர்.

2009ல் நடந்த, லோக்சபா தேர்தலில், கரூர் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கே.சி.பழனிசாமி, 2014ல் போட்டியிட்ட, தி.மு.க., விவசாய அணி மாநில செயலர் சின்னசாமி ஆகியோர் குறித்தும், செந்தில் பாலாஜி கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்.அந்த வீடியோ தொகுப்புகளை, அ.தி.மு.க.,வினர், தெருமுனை பிரசார கூட்டங்களில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News