Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவதுதான் தீர்வு: மருத்துவர்கள் வலியுறுத்தல்!

கொரோனா பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவதுதான் தீர்வு: மருத்துவர்கள் வலியுறுத்தல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 March 2021 11:44 AM GMT

கொரோனா மீண்டும் பரவாமல் இருக்க முக கவசம் அணிவதே இப்போதைய தீர்வு என அரசு மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவின் தாக்கம் கடந்த வருடம் மார்ச் மாதம் இருந்தது போல், தற்போதும் படிப்படியாக அதிகரிக்கிறது.


நகர் பகுதியில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு சரிவர முக கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புறநகர் பகுதியில் இருப்பவர்களை காட்டிலும் நகர் பகுதியில் இருப்பவர்கள் மக்கள் நெருக்கமான இடங்களுக்கு அதிகம் செல்வதால் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.


முக கவசம் அணிவது தொடர்பாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், ஒருவர் முக கவசம் அணிந்திருந்தால் அது அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது. எனவே பொதுமக்கள் யாருடனும் பேசும்போது முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேச வேண்டும்.

முக கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அனைத்து கடை வியாபாரிகளும் அறிவிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் இல்லாவிட்டால் அபராதம் என அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் அதனை அனைவரும் சரிவர கடைபிடிப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News